தமிழக முதல்வரும், கழக இணை ஒருங்கிணைப்பாளருமான
எடப்பாடி, K.பழனிசாமியை
அவதூறாகவும் கழக அரசின் செயல்பாடுகளை பற்றி பொய் பிரச்சாரம் செய்து வரும் கருணாநிதியின் குடும்ப வாரிசும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும் இனிவரும் காலங்களில் தவறான பிரச்சாரம் பேசி வருவதை நிறுத்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பார்ட்டம்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பாக முசிறி அண்ணா சிலை அருகில் இன்று காலை திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வராஜ் பரமேஸ்வரி முருகன், மாவட்ட இணைச்செயலாளர் இந்திரா காந்தி,ஒன்றிய செயலாளர்கள் சேனை செல்வம், வெங்கடேசன், ராம் மோகன்,
மாவட்ட அணி செயலாளர்கள் அறிவழகன் விஜய், பிரபாகரன்,பொன். காமராஜ் டாக்டர். ராஜரத்தினம்
பேரூராட்சி செயலாளர்கள் ராஜேந்திரன், ராஜாங்கம்
மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பல ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.