திருச்சியில் நாளை குடிநீர் ரத்து. மாநகராட்சி ஆணையர் அறிக்கை.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் கோட்டம், கோட்டை ஸ்டேஷன் சாலையில் குடிநீர் உந்து குழாயில் பழுது ஏற்பட்டுள்ளதால்
13.01.2021 புதன்கிழமை
அன்று
பெரிய கடைவீதி, பாபு ரோடு, கீழப்புலிவார்டு ரோடு, ஜாபர்ஷா தெரு, கள்ள தெரு, மேலரண் சாலை, மதுரை ரோடு, நத்தர்ஷா பள்ளிவாசல் தெரு. சிங்காரதோப்பு, தாராநல்லூர், ராணி தெரு, பெரிய சௌராஷ்டிரா தெரு, சுண்ணாம்பு கார தெரு, சமஸ்பிரான் தெரு, கம்மாள தெரு, அலங்கநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு
குடிநீர் விநியோகம் இருக்காது
எனவே பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.