திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இதுவரை எங்கும் பறவை காய்ச்சல்
ஏற்படவில்லை பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தகவல்.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் நோய் இதுவரை எங்கும்
ஏற்படவில்லை
என தெரிவிக்கப்படுகிறது. நன்கு சமைத்த கோழிக்கறி
மற்றும் முட்டைகளை தைரியமாக சாப்பிடலாம்.
ஒரு வேளை நாம்
வாங்கும் கோழி இறைச்சியில் நோய்க்கிருமி இருந்தாலும் அது
கோழிக்கறி சமைக்கும்போது அழிந்துவிடும். 70 டிகிரி செல்சியஸ்
வெப்பநிலையில் பறவைக்காய்ச்சல் வைரஸ் அழிவது நிச்சயம்.
முழுக்கோழியை அப்படியே சமைப்பது கூடாது. ஏனெனில் கோழி
உடலின் அனைத்துப் பகுதிகளிலும் 70 டிகிரி வெப்பம் எட்டாமல்
போய்விடும். அரைவேக்காட்டில் சமைத்த கோழி அல்லது முட்டை
உண்ணக்கூடாது. பச்சை முட்டை அல்லது ” ஆப்பாயில்” சாப்பிடக்
கூடாது. முழுமையாக அவித்த முட்டை அல்லது முழுமையாக பொரித்த
ஆம்லெட் சாப்பிடலாம்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகள்
கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும்
பொழுது கோழிப்பண்ணை உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு
வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு ஒத்துழைப்பு
அளிக்காத கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மீது மாவட்ட
நிர்வாகத்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட
ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.