Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஜனவரி 20ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு

0

'- Advertisement -

Ad banner

வரும் ஜனவரி-20 ஆம் தேதி பள்ளிகள் திறக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் இந்த வருடம் 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இதையடுத்து பள்ளி திறப்பு குறித்து மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு நடத்தப்பட்டது. இதையடுத்து பெற்றோர்களின் கருத்துப்படி பொங்கல் விடுமுறை முடிந்த பிறகு 20ஆம் தேதி முதல் பள்ளிகளில் திறக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதையடுத்து ஆசிரியர் தரப்பில் கூறப்படுவதாவது, பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு சென்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் வசிப்பிடத்திற்கு வரவேண்டும். அதேபோல பொங்கல் விடுமுறை முடிந்து 18 19ஆம் தேதிகளில் பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் பள்ளிகளை 20ஆம் தேதி தான் திறக்க முடியும் என்று தலைமை ஆசிரியர்கள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வரின் ஒப்புதலுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், ஒப்புதல் அளித்த பிறகு முறைப்படி பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.