எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் சோமரசம்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அதிமுக.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..
இதில் முன்னாள் அமைச்சர்கள் கே.கே, பாலசுப்பிரமணியன், கு.பா.கிருஷ்ணன், சிறுபான்மை நலப் பிரிவு மாவட்டச் செயலா ளர் புல்லட் ஜான்,ஒன்றியச் செயலாளர்கள் ஜெயக்குமார் , முத்துக் கருப்பன்,பொருளாளர் சேவியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.