பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது விநியோகத்திட்டத்தின் கீழ் திருச்சி
மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பு, துணிப்பை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும், அதனுடன் பொங்கல் பரிசாக 2500 ரூபாயும் (இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் தாள்கள்) வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் காலை 100 பேருக்கும், மாலை 100 பேருக்கு இந்த பரிசு தொகுப்பு, பணம் வழங்கப்படும். இதற்கான நாள், நேரம் பதிவிடப்பட்ட டோக்கன்கள் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை விநியோகிக்கப்படும். பரிசு தொகுப்பானது ஜனவரி 4ம் தேதி முதல், 12ம் தேதி வரை வழங்கப்படும். விடுபட்ட அட்டைதாரர்களுக்கு 13ம் தேதி வழங்கப்படும். குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் யாரேனும் ஒருவர் வந்து பரிசு தொகையினை பெற்றுக்கொள்ளலாம் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வௌியிட்டுள்ள செய்தி குறிப்பில் தொிவித்து உள்ளார்.