Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நீச்சல் பயிற்சி எடுக்க அனுமதி.

0

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க தினசரி பயிற்சி பெறுவதற்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களாக நீச்சல் குளங்கள் மூடியிருந்தன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்திற்கு தினசரி பயிற்சி துவங்குவதற்கு விதிமுறைகளுடன் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. அதன்படி திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நீச்சல் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுகிறது.

இதில் 12 வயதிற்கு மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க நீச்சல் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்.

நீச்சல் பயிற்சிக்கு வரும் நபர்களிடம் உள்ளே நுழையும் போது வெப்பமானி சோதனை செய்யப்பட்டு இதற்கான ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் நீச்சல் குளம் இயங்குவதற்கு அனுமதி இல்லை. விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு வீராங்கனைகள் தனித்தனி உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். உபகரணங்களை பகிர்ந்து கொள்ளக் கூடாது என்றும், பயிற்சிக்கு முன்பும் பின்பும் கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும். விளையாட்டு பயிற்சிகளை பாதுகாப்பான சூழலில் மேற்கொள்ளப்படவேண்டும்.

நீச்சல்குளத்தில் 20 நபர்களுக்கு மிகாமல் சமூக இடைவெளி விட்டு பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். விளையாட்டு வளாகத்தில் சமூக இடைவெளியுடன் கிருமிநாசினி மூலம் கைகளை கழுவுதல், முக கவசம் அணிதல், நீச்சல் குளத்திற்கு உள்ளே நுழையும் போதும் வெளியே எச்சில் துப்பாமல் தூய்மையாக பயன்படுத்துதல் வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டது.

இதனை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்றுனர்கள் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். 12 வயதுக்குட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளை நீச்சல் குளத்தில் பயிற்சி பெற அனுமதியில்லை. சளி, காய்ச்சல் மற்றும் இருமல் ஆகிய காரணங்களினால் விளையாட்டு மைதானத்தில் அரங்கிற்குள் நுழைய முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. நீச்சல் பயிற்சி மேற்கொள்வதற்கு நுழைவு படிவத்தினை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் பெற்று சமர்ப்பித்த பின்னரே அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.