தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மலைக்கோட்டை கிளை சார்பாக LPF,CITU,INTUC தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது அதில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.
1.14 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே துவக்க கோரியும்,
2,போக்குவரத்து கழகங்கள் பாதுகாத்திட வரவுக்கும் செலவுக்கும் ஆன நிதியை வழங்கு
3.அனைத்து பேருந்துகளையும் முழுமையாக இயக்க கோரியும்
4.ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வு கால பணபலன்களை உடனே வழங்கு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும்
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக :
வேளாண் மசோதாவுக்கு எதிராக
27 நாட்களாக தொடர் போராட்டம் தலைநகர் டெல்லியில் போராட்டம் விவசாயிகளுக்கு ஆதரவாகவும்
இப் போராட்டத்தில் உயிரிழந்த 33 விவசாய தோழர்களுக்குதங்களது வருத்தங்களை பதிவு செய்யும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி அவர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.
இப்போராட்டத்தில் LPF தொழிற்சங்கத்தின் செயலாளர் துரைராஜ்,CITU தொழிற்சங்க கிளை தலைவர் ரமேஷ் மற்றும் செயலாளர் பிரபு ,AITUC தொழிற்சங்க கிளை செயலாளர் செல்வராஜ்,தொழிற்சங்க கிளை செயலாளர் குமாரவேல் மற்றும் அனைத்து தொழிற் சங்கத்தை சார்ந்த நிர்வாகிகளும் தோழர்களும் மத்திய தொழிற்சங்க நிர்வாகிகளும் பலரும் இதில் கலந்து கொண்டனர்.