திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்.
திருச்சியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும் அதை ரத்து செய்ய கோரியும் வடக்கு மற்றும் மத்திய மாவட்டம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தை மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர் மாவட்ட துணைச் செயலாளர் விஜயா ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்எம்எல்ஏ ஸ்டாலின் குமார் ஊராட்சித் தலைவர் தர்மன் ராஜேந்திரன் பகுதி செயலாளர்கள் கண்ணன் மோகன்தாஸ் மற்றும் வடக்கு மாவட்ட அமைப்பாளர் வைதேகிமாநகர துணை செயலாளர் கலைச்செல்வி, விஜயலட்சுமி கண்ணன் தவமணி வளர்மதி சின்ராஜ் ஆதிநாயகி கவிதா சரோஜா துர்காதேவி தீபஜோதி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்