திருச்சியில் விஜய் திவாஸ் வெற்றி தின
49 ஆண்டு நடைபயண விழா.
தமிழ்நாடு முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம் சார்பில் விஜய் திவாஸ் வெற்றி தின 49 ஆண்டு நடைபயண விழா திருச்சியில் நடைபெற்றது.
ஹீரோ ஆப் பட்டாலிடக் வீர் சக்ரா மேஜர் சரவணன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. ஹீரோ ஆப் பட்டாலிக் வீர் சக்ரா மேஜர் சரவணன் நினைவிடத்தில் இருந்து உழவர் சந்தை திடல் வரை விஜய் திவாஸ் வெற்றி தின
49 ஆண்டு நடைபயண விழா
நடைபெற்றது.
விஜய் திவாஸ் வெற்றி தின
49 ஆண்டு நடைபயண விழாவினை ஸ்டேசன் கமாண்டர் மேஜர் வாசுதேவன் துவங்கி வைத்தார்.
தமிழ்நாடு முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்க தலைவர் மூர்த்தி ஆனந்தன் , துணைத் தலைவர் செந்தில்குமார், செயலாளர் பழனிச்சாமி ,இணைச் செயலாளர் சுரேஷ், பொருளாளர் ஆறுமுகம் உள்ளிட்டோருடன் சமூக ஆர்வலர்கள் நடைபயணத்தில் பங்கேற்றனர்.
கார்கில் போர் வீரர் கேப்டன் கணேசன் நிறைவுரையில் பேசுகையில்,
1971 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே போர் மூண்டு அதில் இந்தியா டிசம்பர் 16ஆம் தேதி வெற்றி பெற்றது இப்போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு ஆண்டுதோறும் டிசம்பர் 16ஆம் தேதி விஜய் திவாஸ் என்னும் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

1971 இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போரின் விளைவாக பாகிஸ்தான் இராணுவம் தானாக முன்வந்து நிபந்தனையற்ற சரணாகதி அடைந்தது. கிழக்குப் பாகிஸ்தான் வங்காளதேசம் என்ற தனி நாடாக உருவானது. தங்களின் தோல்விக்குப் பின்னர் டாக்காவில் ரமணா குதிரைப் பந்தைய மைதானத்தில் 93,000 பாகிஸ்தான் வீரர்கள் ஜெனரல் அமீர் அப்துல்லாகான் நியாஸி தலைமையில் இந்தியாவின் லெப்டினெண்ட் ஜெனரல் ஜெகத்சிங் சிங் அரோரா, தலைமையிலான கூட்டணிப் படைகளிடம் சரணடைந்தனர். இப்போரில் உயிர் நீத்த தங்கள் நாட்டு வீரர்களின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும்விதமாக ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் வெற்றி நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்நாளன்று, இந்தியாவின் தலைநகர் புது தில்லி இந்தியவாயிலில் (India Gate) உள்ள அமர் ஜவான் ஜோதியில், முப்படைகளின் தளபதிகளுடன் இணைந்து நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அஞ்சலி செலுத்துகின்றார். அதேபோல் பெங்களூரில் உள்ள தேசிய இராணுவ நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. குடிமக்கள், மாணவர்கள், மூத்த அரசு அதிகாரிகள், முன்னாள் இராணுவத்தினர் ஆகியோர் ஆண்டுதோறும் திசம்பர் 16 அன்று மலரஞ்சலி செலுத்தி வீரர்களின் தியாகத்தை நினைவு கூறுகின்றனர்.
டிசம்பர் 16 இந்திய ராணுவ வெற்றி தினம் விஜய் திவாஸ் குறித்து பேசினார்.
முன்னாள் ராணுவ வீரர் கர்ணல் கோவிந்த் டெல்லியிலிருந்து அலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாடு முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கத்தினருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
ஆரோக்கிய அவ்ரத் அறக்கட்டளை ப்ரியா மகேஸ்வரி நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை
செய்திருந்தார்.
ஜெர்மன் இருக்கணும் முன்னாள் ராணுவ வீரர்கள் குடும்பத்தினர் ,பள்ளி சாரணர் இயக்கம், ஸ்ரீரங்கம், தஞ்சை அரிமா சங்கத்தினர், திருச்சி மெட்ரோபாலிட்டன் ரோட்டரி சங்கத்தினர்,வினை செய் அறக்கட்டளை கார்த்திக்,புதிய பாதை அறக்கட்டளை தீபலெட்சுமி,ஆரா பவுண்டேசன் விக்னேஸ்வரன்,எம்.ஜி.ஆர் சிலை நடை பயிற்சியாளர் அமைப்பினர்
திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார்,நாட்டுக்கு நல்லது செய்வோம் கணேஷ் உட்பட பலர்
விஜய் திவாஸ் வெற்றி தின
49 ஆண்டு நடைபயண விழாவில்
பங்கேற்றனர்