Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் .

0

திருச்சி மாநகராட்சியில் :
பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை
ரூ. 18,900 அபாராதம் வசூலிப்பு.

திருச்சியில்
அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப்பொருட்களை விற்பனை செய்த வணிகர்களிடமிருந்து திருச்சி மாநகரில் ரூ.18,900 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நெகிழியால் ஆன பைகள், சிறு சிறு உறைகள் உள்ளிட்ட நெகிழிப் (ப்ளாஸ்டிக்) பொருட்களை தமிழக அரசு தடை செய்துள்ளது. என்றாலும், தடையையும் மீறி, திருச்சி மாநகரில் நெகிழிப்பொருட்கள் விற்பனை ஆங்காங்கை நடந்துதான் வருகின்றன. அந்த வகையில், நெகிழிப்பொருட்களை விநியோகிக்கும் வணிகர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருச்சி மாநகராட்சி ஆணையர் சு. சிவசுப்பிரமணியன் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி திருச்சி மாநகராட்சி கோ}அபிஷேகபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட கருமண்டபம், தென்னூர், புத்தூர், தில்லைநகர், உறையூர் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் 99 வணிக நிறுவனங்களில் நெகிழிப்பொருட்கள் பயன்பாடு மற்றும் விநியோகிக்கப்படுகின்றனவா என்பது குறித்து மாநகராட்சி, கோ அபிஷேக கோட்ட உதவி ஆணையர் வினோத் தலைமையில், மாநகாராட்சி குழுவினர் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் அரசால், தடை செய்யப்பட்ட சுமார் 25 கிலோ எடையிலான நெகிழிப்பொருட்ள் பரிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 18 கடைகளைச் சேர்ந்த வணிகர்களுக்கு ரூ. 12,300 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல ஸ்ரீரங்கம் கோட்ட பகுதியில் மேற்கொண்ட ஆய்விலும் நெகிழிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ரூ. 6,600 அபராதம் விதிக்கப்பட்டது. ஆக திங்கள்கிழமை ஒரே நாளில் மொத்தம் ரூ. 18,900 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.