தமிழகத்தின் தலை நகரமாக திருச்சியை கொண்டு வர வேண்டும் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கோரிக்கை.
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில பொது செயலாளர் எஸ்.ஷாஜகான் தலைமையில் மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்க பட்ட கோரிக்கை மனுவில் கூறிருப்பதாவது .
1) தமிழகத்தின் தலைநகரமாக சென்னை இருந்து வருகிறது. தற்போது மிகவும் சிற்ப்பான மாவட்டமாகவும் அணைத்து மாவட்டத்திற்கும் நடுவிலும் அணைத்து அரசியல்வாதிகளும் மாநாடு என்று நினைத்தால் வருவது திருச்சி மாநகரை தான் என்று அணைவருக்கும் தெரிந்த ஓன்றே. ஆகையால் மிகவும் செழிப்பான மாவட்டம் திருச்சி மாநகரம் தான் அணைவரும் போற்றி புகழும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை தமிழகத்தின் தலை நகரமாக கொண்டு வர தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கேட்டு கொள்கிறது.
2) தமிழகத்தில் படித்த பட்டதாரிகள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து மனஉழைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். அவர்களுக்கு மன ஆறுதலுக்கு அரசு மாத உதவி தொகை கொடுத்து அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
3) உணவு பொருள்கள் மற்றும் திண்பன்டங்கள் மிகவும் அத்தியாவாசிய பொருள்களை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து வைத்து கடைகளில் பெரிய ஸ்டோர்களில் விற்பனை செய்து வருகிறார்கள். அதில் தேதி காலாவதியான பொருள்கள் மற்றும் மாத்திரைகளும் அடங்கும் .ஆகவே காலாவாதியான பொருள்களை விற்ப்பனை செய்வதை அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பாக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம் என மனுவில் கூறியுள்ளார்.