Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாவட்ட குடிநீர் திட்டப்பணிகள். மார்ச்சுக்குள் முடிக்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

திருச்சி மாவட்ட குடிநீர் திட்டப்பணிகள். மார்ச்சுக்குள் முடிக்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

0

மத்திய அரசின் குடிநீர் திட்டப்
பணிகள் மார்ச்சுக்குள் முடிக்கப்படும்.
ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.

மத்திய அரசுசின் குடிநீர் மேம்பாட்டுத் திட்டப் பணிகளை வரும் மார்ச் மாதத்துக்கள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறை அலுவலர்களுடன் மத்திய அரசின் குடிநீர்( ஜல் ஜீவன் மிஷன் ) திட்டப்பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நிர்வாக இயக்குநர் சி.என். மகேஸ்வரன் தலைமை வகித்தார். திருச்சி மாவட்டத்தில் மத்திய அரசின் (ஜல் ஜீவன் மிஷன்) திட்டத்தின் கீழ், 14 மற்றும் 15 ஆவது மத்திய நிதிக்குழு மான்யம் மூலம் ரூ. 71.58 கோடி மதிப்பில் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 1093 குக்கிராமங்களில் உள்ள 98,286 தனிநபர் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இத் திட்டத்தின் மூலம் கிராம பகுதிகளில் உள்ள பெண் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் நெடுந்தூரரம் சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை மற்றும் வரிசையில் நின்று குடிநீர் பிடிப்பது உள்ளிட்டவைகள் தவிர்க்கப்படுகின்றன. ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 55 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டப்பணிகள் அனைத்தும் வருகின்ற மார்ச் 2021 க்குள் முடித்திடுமாறு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நிர்வாக இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

இக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, நிர்வாகப் பொறியாளர்கள் முருகேசன், எழிலரசன், மாவட்ட குடிநீர் மற்றும் சுகாதார குழு உறுப்பினர்கள், உதவி திட்ட அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்(கிராம ஊராட்சிகள்),ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.