அதிமுக மாநகர் மாவட்ட புதிய நிர்வாகிகள் : அமைச்சர் வெல்ல மண்டி நடராஜனன சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அதிமுக மாநகர் மாவட்ட புதிய நிர்வாகிகள் : அமைச்சர் வெல்ல மண்டி நடராஜனன சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
திருச்சி மாநகர் மாவட்ட
அதிமுக புதிய நிர்வாகிகள் நியமனம். அமைச்சரிடம் வாழ்த்து பெற்றனர்.
திருச்சி, டிசம்பர், 2-
கழக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு.
திருச்சி மாநகர மாவட்ட அதிமுக புதிய நிர்வாகிகள் பட்டியலை அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
திருச்சி மாநகர் மாவட்டத்தில் பகுதி கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் வட்ட செயலாளர்கள் முதல் நியமிக்கப்படுகின்றனர்.
திருச்சி மாவட்ட அவைத் தலைவராக மலைக்கோட்டை ஐயப்பன், இணைச் செயலாளர்களாக ஜாக்குலின், துணைச் செயலாளர்களாக வனிதா, அருள்ஜோதி மாவட்ட பொருளாளராக மனோகரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக வக்கீல் ராஜ்குமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக கருமண்டபம் பத்மநாதன், இளைஞர் அணி செயலாளராக சிந்தை முத்துக்குமார்,மகளிர் அணி செயலாளராக டாக்டர்.தமிழரசி சுப்பையா, மாணவரணி செயலாளராக இன்ஜினியர் கார்த்திகேயன், அண்ணா தொழிற்சங்க செயலாளராக ராஜேந்திரன், வழக்கறிஞர் பிரிவு செயலாளராக வக்கீல் எம்.எஸ். ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவு செயலாளராக மீரான், விவசாய பிரிவு செயலாளராக கருட நல்லேந்திரன், மீனவர் பிரிவு செயலாளராக அப்பாஸ், வர்த்தக அணி செயலாளராக ஜோசப் ஜெரால்டு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பகுதி செயலாளர்களாக மீண்டும் பழைய நபர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.
வட்ட செயலாளர்களாக எட்டாவது வார்டு பொண். அகிலாண்டம், 15-ஆவது வார்டு சிங்கமுத்து, 12வது வார்டு நத்தர்ஷா, 12 ஏ வார்டு கட்பீஸ் ரமேஷ், 18-வது வார்டு தியாகராஜன், 21வது வார்டு கேடி தங்கராஜ், 35ஏ வார்டு சரவணன் ,38 வது வார்டு சதீஷ்குமார், 49ஏ வார்டு வெல்லமண்டி கன்னியப்பன், 51 ஏ வார்டு ராஜகோபால், 56 ஆவது வார்டு திருமுருகன்,39-வது வார்டு வசந்தம் செல்வமணி, 41 ஏ-வார்டு சரவணன் ,45 வார்டு முகமது ரபீக் இளைஞர் பாசறை மாவட்ட செயலாளராக இலியாஸ், செல்வமே மாவட்ட துணை செயலாளராக கேபிள் முஸ்தபா, காந்தி மார்க்கெட் பகுதி பொருளாளராக ஸ்பீடு சிராஜுதீன் மாநகர மாவட்ட விவசாய அணி பொருளாளராக விஸ்வநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு கழக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது
புதிய நிர்வாகிகள் அனைவரும் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் சுற்றுலாத் துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.