பணத்துக்காக அல்ல மக்களுக்காகத்தான் ரஜினி படைக்கப்பட்டுள்ளர். சாமியார் அதிரடி
பணத்துக்காக அல்ல மக்களுக்காகத்தான் ரஜினி படைக்கப்பட்டுள்ளர். சாமியார் அதிரடி
ரஜினி அரசியலுக்கு வராவிட்டால் அவரது வாழ்வு அஸ்தமனமாகிவிடும் என ஜான் போஸ்கோ என்கிற சாமியார் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என நீண்ட காலமாக ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள். ஆனால் அறிவிப்போடுதான் அவரது அரசியல் பிரவேசம் நிற்கிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் அவர் மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ராகவேந்திரா திருமண மண்டப வாயிலில் திரண்டார்கள். ஜனவரியில் கட்சியை தொடங்குங்கள் என ரசிகர்கள் கோஷமிட்டனர்.
இந்த நிலையில் அங்கு நெற்றியில் பெரிய சந்தனம் வைத்து கொண்டு அதில் நிலவு போல் குங்குமம் இட்டு கொண்டு தலையில் சிவப்பு நிற துணியை முண்டாசு போல் கட்டி கொண்டு சாமியார் போல் ஒருவர் இருந்தார்.
அங்கிருந்தவர்கள் நீங்கள் ரஜினியின் ரசிகரா என கேட்டானர் அதற்கு அவரோ நான் ரசிகர் எல்லாம் கிடையாது. பெருமாளின் ரூபம். அம்மனுடைய அருள். இரு சக்திகளும் என்னை ஆட்டி படைக்கின்றன. ரஜினியை அரசியலுக்கு வரவழைத்து மக்களை காத்து மானத்தோடு வாழ வைக்க என்னை தெய்வ அம்சங்கள் வழி நடத்துகின்றன.
ஆரம்பிக்காவிட்டால் அவருடைய வாழ்க்கை அஸ்தமித்து போய்விடும். பணம் சம்பாதிப்பதற்காக தெய்வம் ரஜினியை இந்த பூமியில் விட்டு வைக்கவில்லை. மக்களை காக்கவும் மானத்தோடு வாழ வழிகாட்டவும் தான் பூமியில் வைத்துள்ளார்.
பொருளை பற்றி கவலையில்லாமல் என் மக்களின் வேலை பற்றி கவலைப்படுற வாய்ப்பைத்தான் நான் நாடி வந்துள்ளேன்.
நான் ஆன்மீகவாதி அல்ல. மக்களையும் உங்களையும் நேசிக்கிறவன். தெய்வம் என்னுள் வந்து ஆட்டி படைக்கிறது. அவர் வருவாரா ? வரமாட்டாரா? என சொல்ல நான் ஜோசியக்காரரோ மந்திரவாதியோ அல்ல.
அவர் அரசியலுக்கு வந்தால் 51 சதவீதம் வாக்குகள் நிச்சயம் கிடைக்கும்.
அதிலும் சகாயம் ஐஏஎஸ் போன்ற அதிகாரிகளை முன்னிறுத்தினாலும் 51% வாக்குகள் உண்டு.
என்னை அணுகினால் 70% க்கு சாத்தியம் உண்டு. அவர் அரசியலுக்கு வந்தால் மது இல்லாத நாடு, லஞ்ச ஊழல் இல்லாத அரசியல்வாதிகள், ஊழல் இல்லாத அதிகாரிகள், காவல் துறையினர் ஆகிய மாற்றங்கள் ஏற்படும் என சாமியார் தெரிவித்தார்.