திருச்சி அமமுக கருத்து கேட்பு கூட்டம் ஜெ. சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
திருச்சி அமமுக கருத்து கேட்பு கூட்டம் ஜெ. சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
சட்டசபை தேர்தல் குறித்து
அமமுக களஆய்வு, தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டம்
திருச்சியில் இன்று நடைபெற்றது.
திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 2021 சட்டசபைத் தேர்தல் குறித்த கள ஆய்வு மற்றும் தேர்தல் அறிக்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம் திருச்சி விமான நிலையம் வயர்லெஸ் ரோடு முத்தையா திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
அமமுக பொருளாளர் மனோகரன், அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்.
மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் மாரியப்பன் கென்னடி, அமைப்புச் செயலாளர் தேவதாஸ், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் டேவிட் அண்ணாதுரை, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கார்த்திகேயன், செய்தி தொடர்பாளர் அதிவீரராமபாண்டியன் ஆகியோர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் சாத்தனூர் ராமலிங்கம், முதலியார் சத்திரம் ராமமூர்த்தி, பாலாஜி, கல்நாயக் சதீஷ், பொன்மலை சங்கர், இன்ஜினியர் ரமேஷ், தில்லைநகர் பகுதி அம்மா பேரவை செயலாளர் சாலமன், சொக்கலிங்கம், ரோஜர், மிர்பஹா .தாஜுதீன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் தலைமை கழகம் அறிவிக்கும் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் தலைமைக் கழகத்தின் முடிவின்படி தீவிரமாக தேர்தல் களப்பணியாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன