ஜாதி கலவரத்தை தூண்டும் சமூக விரோதிகளை கைது செய்ய முத்தரையர் இளைஞர் பேரவை தலைவர் கோரிக்கை.
ஜாதி கலவரத்தை தூண்டும் சமூக விரோதிகளை கைது செய்ய முத்தரையர் இளைஞர் பேரவை தலைவர் கோரிக்கை.
திருச்சி திமுக செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் ஒரு சமூகத்தை தவறாக பேசினாரா என்பதை காவல்துறை தான் விசாரணை செய்ய வேண்டும்.
முத்தரையர் இளைஞர் பேரவை வேண்டுகோள் :
திருச்சியில் தமிழ்நாடு புரட்சி முத்தரையர் இளைஞர் பேரவையின் தலைவர் சூரியபாலு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது.
திருச்சியில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் மீது அவதூறு பரப்பி வரும் மற்றும் ஜாதி கலவரத்தை ஏற்படுத்துபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்தரையர் சமூகத்திற்கு எதிராக ஜாதி கலவரத்தை தூண்டும் சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் ஆடியோ பேசினார் என்பதை காவல்துறை தான் நிரூபிக்க வேண்டும். திருச்சியை ஜாதி பிரச்சனை இல்லாத மாவட்டமாக இருக்க நாங்கள் விரும்புகிறோம்.
செய்தி தொலைக்காட்சிகள் சிலர் தவறாக செய்திகள் பரப்பி வருகின்றனர். சமூக வலைதளங்களை காவல்துறையினர் கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.