அனுமதியின்றி பொதுக்குழுவை கூட்டிய TELC பேராயர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
அனுமதியின்றி பொதுக்குழுவை கூட்டிய TELC பேராயர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ் சுவிசேஷ லுத்திரன் திருச்சபை (TELC) 1919 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாரம்பரிய திருச்சபை ஆகும். இச்சபையின் நிர்வாகத்தை பேராயராக இருக்கும் உயர்மாமறை D.டேனியல் ஜெயராஜ் நிர்வகித்து வருகிறார். இவர் இந்த ஆண்டுக்கான பொதுக்குழுவை கூட்ட திட்டமிட்டிருந்த நிலையில், ஆலோசனை சங்க செயலர் மெகர் ஆண்டனியின் மூலமாக கொரானா காலத்தில் பொதுக்குழு நடத்தத் தேவையில்லை என்று தடை உத்தரவு பெற்றார். இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் அவர்களிடமும் கூட்டத்தை நிறுத்த கடிதம் கொடுக்கப்பட்டது.
இதை எல்லாம் கண்டுகொள்ளாத பேராயர் அவர்கள் தனது சுயலாபத்திற்காகவும், தனது ஆட்சி காலத்தை இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பு செய்ய திருச்சபை சட்டத்தை திருத்தம் செய்திடவும் பொதுக்குழு கூட்டத்தை 10.11.2020 அன்று அரசாணையை மீறியும் திருச்சபை சட்டத்திற்கு முரணாகவும் கூட்டத்தை கூட்டி அசாதாரண சூழலை ஏற்ப்படுத்தினார். அன்று காலை நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஆயர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பார்வையாளர் என சுமார் 1000க்கும் மேற்பட்ட நபர்கள் நான்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒன்றாக கூடினர். இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு வீடு திரும்பிய மூத்த ஆயர் மறை அருள் சந்திரன் என்பவருக்கு கொரனா அறிகுறிகள் தென்பட்டு பின்னர் கோவிட் 19 உறுதி செய்யப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் மூலமாக 10.11.2020 அன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பலருக்கு நோய்த்தொற்று ஏற்ப்பட்டு இருக்கலாம் என்ற ஐயம் ஏற்ப்படுகிறது. மேலும் நிகழ்வுகளிலும் கலந்து கொண்ட அனைத்து நபர்களுக்கும் கோவிட் 19 பரிசோதனை செய்து நோய் பரவலை தடுக்க வேண்டும் என்றும், இந்த கொடிய கொரனா நோய்த்தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளையும் பாதுகாப்பு வழிமுறைகளையும் நம் தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனது பதவி சுகத்திற்காகவும், சுயலாபத்திற்க்காகவும் மக்கள் உயிரோடு விளையாடி மீண்டும் நோய் பரவ ஏதுவாக செயல்பட்ட பேராயர் டேனியல் ஜெயராஜ் அவர்கள் மீது கொள்ளை நோய் சட்டம் 1897 படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் இது குறித்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் டி இ எல் சி துணைத் தலைவர் சாமுவேல் ஆபிரகாம், ஆலோசகர் ஆல்பர்ட் இன்பராஜ், பொருளாளர் பாஸ்கரன், சென்னை ரெட்ஹில்ஸ் சங்க செயலாளர் தாமஸ் பிரிட்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.