ஓர் உயிர் போனால் கூட திருச்சி பற்றி எரியும். அரசுக்கு கோவிந்தராஜுலு எச்சரிக்கை
ஓர் உயிர் போனால் கூட திருச்சி பற்றி எரியும். அரசுக்கு கோவிந்தராஜுலு எச்சரிக்கை
திருச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மற்றும் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில்…
கொரோனா கால கட்டத்தில் வியாபாரிகள் தமிழக அரசிற்கு பெருமளவிற்கு ஒத்துழைப்பு வழங்கியது.
காந்தி மார்க்கெட்டில் விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு வழக்கை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து வியாபாரிகளுக்கு சாதகமான தீர்ப்பு ஏற்பட வழிவகை செய்ய வேண்டும் என்றும்,
மாலை 6 மணி முதல் திருச்சியில் உள்ள காய்கறி பழ மார்க்கெட்டுகள் முழுமையாக அடைக்கப்பட்டு போராட்டம் தொடங்கியது.
திருச்சி மார்க்கெட் மட்டும்தான் மூடப்படுவதாக தமிழக அரசு மெத்தனம் காட்டாமல், தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட தமிழக வியாபாரிகள் தயார் நிலையில் உள்ளதை கருத்தில்கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்.
கொரோனா காலத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வியாபாரிகளுக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும்,
பொதுமக்கள் வியாபாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் ஆன்லைன் வர்த்தகத்தை தவிர்க்க வேண்டும் அரசு அதனை தடை செய்ய வேண்டும் என்றும்,
ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் கடைகளை இடிப்பது, வியாபாரிகளைப் புறக்கணிப்பது தவறான ஒன்று.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தீர்ப்பு சரியாக இல்லாத பட்சத்தில் தமிழகம் முழுதும் வியாபாரிகள் போராட்டம் நடத்துவோம் மேலும் கோவிந்தராஜுலு கூறுகையில் இந்த மார்க்கெட்டுக்கு காந்தி என பெயர் வைத்தது இருப்பதால் என்னவோ நாங்கள் காந்திய வழியிலேயே போராடி வருகிறோம். வேற பெயர் வைத்திருந்தால் வேறு வழியில் போராடி இருப்போமோ என்னவோ,
காந்தி மார்க்கெட் போராட்டத்தில் ஒரு உயிர் போனால்கூட திருச்சி பற்றி எரியும் என ஆவேசமாக பேசினார்.
கடையடைப்பு போராட்டத்தால் பொது மக்களுக்கு தான் பாதிப்பு எனவே அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.