பள்ளிகள் திறப்பது குறித்த பெற்றோர் கருத்துகள் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
பள்ளிகள் திறப்பது குறித்த பெற்றோர் கருத்துகள் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் பெறப்பட்ட கருத்துக்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு இன்று அனுப்பிவைக்கப்படுகிறது..
கொரோனோ காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன இந்த நிலையில் வருகின்ற 16-ஆம் தேதி 9, 10 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் நோய் தொற்றுக்கு ஆனவர்கள் என்பதால் பள்ளிகளை திறக்க அரசியல் கட்சிகள் கல்வியாளர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா என்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்படும் என அரசு அறிவித்தது இதனைத் தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் பள்ளிகள்.திறப்பு குறித்து பெற்றோர்களிடம் கருத்துக்களை கேட்டு பதிவு செய்கின்றனர். தொடர்ந்து இன்றைய தினமே பெறப்பட்ட கருத்துக்களை பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
பெற்றோர்களிடம் பெறப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்து அதன் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு முடிவெடுக்க உள்ளது. இந்த நிலையில் சில மாவட்டங்களில்
பள்ளிகள் திறப்பது குறித்து முன்கூட்டியே பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு கையெழுத்து பெறப்பட்டுள்ளது
இதுதொடர்பாக கையெழுத்து பதிவு செய்த பெற்றோர்களிடம் தொடர்பு கொண்டு பேசியபோது தங்கள் பிள்ளைகளின் தலைமையாசிரியர் நேரடியாக வீட்டிற்கு வருகை புரிந்து கையெழுத்து பெற்றதாக தெரிவித்தனர்.