ஒழுங்கா நடக்காவிட்டால் கல்லறைக்கு அனுப்புவோம்.பாஜக தலைவர் பேச்சால் பதற்றம்.
ஒழுங்கா நடக்காவிட்டால் கல்லறைக்கு அனுப்புவோம்.பாஜக தலைவர் பேச்சால் பதற்றம்.
ஒழுக்கமாக நடக்காவிட்டால் கல்லறைக்கு அனுப்புவோம் என பேசிய பாஜக தலைவரின் பேச்சால் பதற்றம்.
மம்தா பானர்ஜியின் கட்சியினர் தங்களை திருத்திக் கொள்ளாவிட்டால் அவர்களின் கை, கால், தலை, விலா எலும்புகள் உடைக்கப்படும் என மேற் வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்வங்கத்தில் ஆறு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஆனாலும் அதற்குள் அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. மேற்குவங்கத்தை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என பாஜகவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பரப்புரை கூட்டம் ஒன்றில் அம்மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர், மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் தங்களை ஆறு மாதத்திற்குள் திருத்திக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் அவர்கள் கை, கால், தலை , விலா எலும்புகள் உடைக்கப்படும் என பேசினார்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரின் ஒழுங்கின செயல் நீடித்தால் வெளியே வரும் அவர்கள் வீடு திரும்ப முடியாது, மருத்துவமனைக்கு அனுப்பிவைப்போம் என்றும், ஒழுங்கீனம் அதிகரித்தால் கல்லறைக்கு அனுப்புவோம் என்றும் அவர் பேசியிருப்பது சர்ச்சையையும், பதற்றத்தையும் அதிகரித்துள்ளது.