Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விமான நிலையங்களில் தமிழில் அறிவிப்பு இருக்கும். அமைச்சர் உறுதி

விமான நிலையங்களில் தமிழில் அறிவிப்பு இருக்கும். அமைச்சர் உறுதி

0

 

 

 

 

 

தமிழகத்தில் தமிழ் மொழியில் விமான அறிவிப்பு இருக்கும்… அமைச்சர் உறுதி

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் டெல்லியில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் அமைச்சக உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்தார். பின்னர் இது குறித்த அறிக்கை ஒன்று வெளியிட்டார்.
அதில், தமிழ்நாட்டு விமான நிலையங்களிலும், தமிழ்நாட்டில் இருந்து புறப்படும், தமிழ்நாட்டுக்கு வரும் விமானங்களிலும் அறிவிப்புகள் இனி தமிழில் முதலாவதாக இடம் பெறும் என்று தெரிவித்துள்ளார்.
பொங்கல் திருவிழாவுக்குள் தமிழக விமான நிலையங்களில் இறங்கும் விமானங்களில் அறிவிப்புகள் தமிழ் மொழியில் ஒலிக்கும் என்று தன் நம்பிக்கையையும் அமைச்சர் பாண்டியராஜன் குறிப்பிட்டார். மத்திய அரசின் அலுவல் மொழியான ஹிந்திக்கு இணையாக செம்மொழியான தமிழுக்கும் தகுதிநிலை வழங்கப்பட வேண்டும் என்று தொடர்புடைய துறைச் செயலாளர்களை சந்தித்து வலியுறுத்தியதாகவும் இதனைப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன அலுவலகங்களில் ஒவ்வொரு நாளும் ஒரு ஹிந்தி சொல்லுக்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் பொருள் எழுதி காட்சிப்படுத்தி வரும் நடைமுறையைப் போலவே மற்றொரு விளம்பர பலகையிலும் ஒவ்வொரு ஒரு தமிழ் சொல்லுக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பொருள் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.
தமிழ் உட்பட பல்வேறு மாநில மொழிகளுக்கு பின்னடைவு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுப்பது தங்கள் பொறுப்பு என இத்துறை அதிகாரிகள் ஒப்புக்கொண்டதாக அமைச்சர் குறிப்பிட்டார். நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதை குறிப்பிட்ட அமைச்சர், ஒரே நேரத்தில் பல்வேறு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கக்கூடிய மென்பொருளை உருவாக்கும் திட்டத்தினை வேகமாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் அனைத்து தீர்ப்புகளும் வெளிவந்த ஒரு நாளுக்குள் 16 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கின்ற யோசனை செயல்வடிவம் பெறுவதற்கும் மற்றும் மத்திய அரசு அனுப்பும் கடிதங்கள் மற்றும் சுற்றறிக்கைகள் உடனே மொழி பெயர்க்கப்படுவதற்கும் மத்திய அரசு மேற்கொண்டுவரும் மென்பொருள் திட்டம் உதவும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
செம்மொழி தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இயக்குநரை நியமிக்க சமீபத்தில் உத்தரவு வெளியிடப்பட்டுள்ள நிலையில், 74,000 சதுர அடி பரப்பில் அந்நிறுவனத்திற்கான கட்டடம் விரைவில் தயாராகிவிடும் என்றும் பாண்டியராஜன் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.