Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விஜய்யிடம் பல வில்லன்கள் நல்லவர்களாக நடிக்கிறார்கள். எஸ்.ஏ.சி.விளக்கம்.

விஜய்யிடம் பல வில்லன்கள் நல்லவர்களாக நடிக்கிறார்கள். எஸ்.ஏ.சி.விளக்கம்.

0

 

ரசிகர் மன்றம், மக்கள் இயக்கம் ஆரம்பித்து போல் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளேன் எஸ்.ஏ.சி.

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர், அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளார். இதனால் இது விஜய் ஆரம்பித்த கட்சியா என தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இது என்னுடைய முயற்சி. இது விஜயின் அரசியல் கட்சி அல்ல அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் விளக்கம் அளித்தார். ஆனால், ஆரம்பத்திலேயே தனது தந்தையின் கட்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.

அக்கட்சியில் எனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தினால் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன் என நடிகர் விஜய் கூறியுள்ளார். மேலும் அக்கட்சியில் ரசிகர்கள் யாரும் சேரவேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் பிகைன்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், என் பிள்ளை நன்றாக வரவேண்டும் என்பதற்காக, அவரை கேட்காமலேயே 1993 இல் அவருக்கான ரசிகர்மன்றத்தை நான் தான் ஆரம்பித்தேன். இன்று அவர் உச்சநட்சத்திரம் ஆகிவிட்டார் என்பதற்காக அவர் என் பிள்ளை இல்லையா?.
தனது ரசிகர்களை நான் ஆரம்பித்த கட்சியில் சேரவேண்டாம் என சொல்லி இருக்கிறார், ஆனால் அப்பா நல்லதுதான் செய்துள்ளார் என புரிய கொஞ்சகாலம் பொறுத்திருப்போம்.

எனது கட்சியில் விஜயின் பெயர், புகைப்படத்தை பயன்படுத்தினால் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன் என சொல்லியுள்ளார், அதுபோல் நடவடிக்கை எடுத்து என்னை ஜெயிலுக்கு அனுப்பட்டும், அப்பா மீது பிள்ளை நடவடிக்கை எடுத்தார் என்பதே வரலாறுதானே.
விஜய் ரசிகர் மன்றம் என்னுடைய அமைப்பு, அதனை மக்கள் இயக்கமாக மாற்றியபோது நிறுவனராக இருந்ததும் நான்தான், அது என்னுடைய அமைப்பு அதனை இப்போது அரசியல் கட்சியாக நான் மாற்றியுள்ளேன்.

என் மனைவி ஷோபாவுக்கு இந்த அரசியல் கட்சியில் விருப்பமில்லை என்றால் விலகிக்கொள்ளட்டும், நான் வேறு பொறுப்பாளரை போடுவேன். எந்த குடும்பத்தில்தான் பிரச்சனை இல்லாமல் இருக்கிறது, பிரச்சனை இல்லை என்றால் அது குடும்பமே இல்லை. நான் விஜய்க்காகவே வாழ்ந்து வருகிறேன், அவரை நல்ல நடிகனாக வளர்க்க என் தொழிலையே விட்டுவிட்டு விஜய்க்காக கூலிக்காரன்போல பியூன்வேலை பார்த்துள்ளேன். எனக்கும் விஜய்க்கும் உள்ள உறவை உடைக்கவே பலரும் முயற்சி செய்கிறார்கள்.
விஜயிடம் வில்லன்கள் நல்லவன்போல நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.  இவ்வாறு பல்வேறு கேள்விகளுக்கு அவர் விளக்கமாக பதில் அளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.