திருச்சியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம்
திருச்சியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் திருச்சியில் மாநில தலைவர் சுதாகரன் தலைமையில் நடைபெற்றது. இயக்கத்தின் மாநில துணை தலைவர் வரவேற்புரை ஆற்றினார். இயக்கத்தின் பொது செயலாளரும் அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலருமான ரங்கராஜன் தலைமையில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது,
6வது மற்றும் 7வது ஊதியக் குழுவில் ஏற்பட்டுள்ள போதிய வாய்ப்பு பாதிப்பை இடைநிலை ஆசிரியர்களுக்கு உடனே வழங்கிட வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்
ஆசை அவருக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனை உடனடியாக மறுபரிசீலனை செய்து அரசாணை 116 ஐ ரத்து செய்திட வேண்டும்.
ஆசிரியர் பயிற்சி முடித்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கவும் 2012 பிறகு இடங்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவே அரசு அணை 12 ஐ ரத்து செய்து ஆசிரியர் பணியிடங்களை வயது வரம்பு மீறி தொடர்ந்து வழங்கிட வேண்டும்.
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு வழங்கபட்ட 17A, 17B ரத்து செய்து ஆசிரியர்களுக்கு தமிழக அரசு ஊதியம் வழங்கிட வேண்டும்,
கற்போம் எழுதுவோம் என்ற புதிய திட்டத்தில் ஆசிரியர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்,
பள்ளிகளுக்கு ஒப்பந்ததாரர்கள் மூலம் வழங்கும் பொருட்களை பள்ளி மேலாண்மை குழு மூலமே வழங்க உத்தரவிட வேண்டும்
மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படியினை பாரபட்சமின்றி வழங்கிட வேண்டும்,
மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறும் ஆசிரியர்களுக்கு முழு மருத்துவ செலவையும் அரசே வழங்க வேண்டும்
இயக்கத்தின் மாநில தேர்தலை ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் நடத்துவது என செயற்குழு முடிவு..
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நிறைவாக மாநில பொருளாளர் கதிரவன் நன்றி கூறினார். மேலும் இக் கூட்டத்தில் மாநில துணைத்தலைவர்கள், மாநில செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.