மாவட்டத் தலைவராக இருந்து கட்சி மாநில தலைவர் ஆனார் ஆர்.கே. ராஜா. மகிழ்ச்சியில் மக்கள் இயக்கத்தினர்.
மாவட்டத் தலைவராக இருந்து கட்சி மாநில தலைவர் ஆனார் ஆர்.கே. ராஜா. மகிழ்ச்சியில் மக்கள் இயக்கத்தினர்.
மாவட்ட தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவருக்கு ? கட்சித் தலைவர் பதவி. மகிழ்ச்சியில் திருச்சி மக்கள் இயக்கத்தினர்
நடிகர் டி.ராஜேந்தர், விஜயகாந்த், சரத்குமார், கார்த்தி கமல், சீமான் வரிசையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்று அரசியல் விமர்சகர்கள் கணித்தனர். இதை உறுதிப்படுத்தி, விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாகும் என்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அண்மையில் உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் கட்சி தொடங்க தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவராக திருச்சி முதலியார் சத்திரைத்தைச் சேர்ந்த பத்மநாபன் என்கிற ஆர்.கே.ராஜா, பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக ஷோபா ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள பத்மநாபன் என்கிற ஆர்.கே.ராஜா, விஜய் மக்கள் இயக்கத்தின் மூத்த நிர்வாகிகள் மத்தியில் இன்ப அதிர்ச்சியாகியுள்ளது.
யார் இந்த ஆர்.கே.ராஜா..?
கடந்த 1993ம் ஆண்டு விஜய் ரசிகர் மன்றத்தை அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கினார். அப்படி தொடங்கப்பட்டதில் 3-வது மன்றத்தை திருச்சியில் தொடங்கியவர் ஆர்.கே.ராஜா. இவர் விஜய், அவருடைய தாய், தந்தையோடு நெருக்கமானவர். 1993-ம் ஆண்டு ரசிகர் மன்றம் பின்னர் நற்பணி இயக்கமாகவும் 2009-ம் ஆண்டு மக்கள் இயக்கமாகவும் மாற்றப்பட்டது.
இவை அனைத்திற்கும் நிறுவனர், தலைவர் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர். ஆனால், இவற்றின் பொறுப்பாளராக புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ புஸ்ஸி ஆனந்த் 2013ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். புஸ்ஸி ஆனந்த் பொறுப்பாளர் ஆனதிலிருந்து விஜய் மக்கள் இயக்கத்தின் மூத்த நிர்வாகிகளுடன் உரசலும் தொடங்கியது. மூத்த நிர்வாகிகளிடத்தில் தொடங்கிய உரசல் தந்தை – மகன் வரை நீண்டது. ஆனாலும் ரசிகர் மன்றம், தொண்டரணி, இளைஞரணி நிர்வாகிகள் என பிரிவுகளும் கோஷ்டிகளும் ஏற்பட்டன.இதன் ஒரு நிகழ்வாக 25 ஆண்டுகளுக்கு மேல் மன்றத்தில் இருந்த, எஸ்.ஏ.சி குடும்பத்திலும் நெருக்கமாக உள்ள திருச்சி ஆர்.கே.ராஜா மக்கள் இயக்க மாவட்ட தலைவர் பதவியில் இருந்து விஜயின் ஒப்புதலோடு நீக்கப்படுவதாக கடந்த ஜுன் 14ம் தேதி தலைமை நற்பணி இயக்கத்தின் பொறுப்பாளரான புஸ்ஸி ஆனந்த் அறிவித்தார். இது நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டாலும் ஆர்.கே.ராஜா அமைதியாக இருந்தார்.
எஸ்.ஏ.சந்திரசேகரைச் அடிக்கடி சந்தித்த அவர், நிர்வாகிகளிடம் தொடர்பிலேயே இருந்தார். மூத்த நிர்வாகிகள் பலரும் ராஜாவிற்கு ஆதரவளித்தனர். கடந்த மாதம் இருபெரும் தலைவர் இல்லாத வெற்றிடத்தை நிரப்ப வரும் நாளைய முதல்வரே என்று விஜயை குறிப்பிட்டு திருச்சியில் போஸ்டர் ராஜா ஆதரவாளர்கள் ஒட்டினர். இதை புகாராக விஜயிடம் கொண்டு சென்றனர் எதிர்முகாமினர். இதையடுத்து மக்கள் இயக்கத்திற்கு புதிய நிர்வாகிளும் நியமிக்கப்பட்டனர்.ஆனால் இந்த நியமனங்களை ஆர்.கே.ராஜா தரப்பினர் மறுத்தனர். இப்போதும் ராஜாவே மாவட்ட தலைவர் என்றனர்.
அதே நேரத்தில் நடிகர் விஜய், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோரை சந்திக்காத ஆர்.கே.ராஜா விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சியை தொடர்ந்து சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார். இந்நிலையில்தான் , கட்சிக்கான தேர்தல் ஆணைய விண்ணப்பத்தில் கட்சியின் தலைவராக பத்மாநாபன் என்கிற ஆர்.கே.ராஜா பெயர் உள்ளது.
இது மக்கள் இயக்க மூத்த நிர்வாகிகளிடம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்தால் விஜய் ஒப்புதலோடு மாவட்ட தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர் தற்போது கட்சிக்கே தலைவராகியுள்ளார். மகனால் பதவி நீக்கம் செய்யாப்பட்டவர், தந்தையால் தலைவராகியுள்ளார்.
இது திருச்சிக்கு பெருமை. பொறுமைக்கும் உழைப்பிற்கும் கிடைத்த அங்கீகாரம் என்று ஆர்.கே.ராஜா தரப்பினர் சொல்கிறார்கள்.
விஜய் பெயரில் கட்சி என்றாலும் விஜய் அதை ஏற்கவில்லையே என்று அவர்களிடம் கேட்டதற்கு,இது தந்தை மகனுக்கிடையே உள்ள பிரச்னை. இந்த பிரச்னை எல்லாம் ஓரிரு நாளில் சரியாகி விடும். விரைவில் கட்சிக்கு விஜய் தலைமை ஏற்பார் என்கின்றனர் நம்பிக்கையோடு.