Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்டாலினை வறுத்தெடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ஸ்டாலினை வறுத்தெடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

0

மு.க.ஸ்டாலின் அறைக்குள் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் ஆள் விட்டுப்பார்த்து விட்டோம் எனக் கூறி பகீர் கிளப்பி உள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
இதுகுறித்து பேசிய அவர், ”விருதுநகர் கூட்டத்தில் நாட்டுக்காக உடல் கொடுத்த சங்கரலிங்க நாடார் பற்றி பேசும், உரிமை யோக்கிதை மு.க.ஸ்டாலினுக்கு என்ன இருக்கிறது. தியாகி சங்கரலிங்க நாடாருக்கு என்ன செய்தது திமுக. இதுவரை ஒரு மணிமண்டபம் கட்டித் தந்து இருக்கிறதா? ஒரு சிலை வைத்தார்களா? நான் செய்தி தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது 7 வருடங்களுக்கு முன்பு அம்மா இருந்தபோது மணிமண்டபமும் வெண்கலச் சிலையும் கட்டி தந்தோம். அவருடைய தியாகத்தை போற்றியவர் புரட்சித்தலைவி அம்மா.

காமராஜரைப் பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு உரிமை கிடையாது. சட்டசபையில் காமராஜரை கருவாட்டுக்காரி மகன் என்று சொன்னவர் கருணாநிதி.

பெருந்தலைவர் காமராஜரை தோற்கடிப்பதற்காக வீதி வீதியாக பிரச்சாரம் செய்தவர்தான் கலைஞர். நாங்கள் விருதுநகர்காரர்கள். சிவகாசி, விருதுநகர் மண். எங்கள் ஊரில் வந்து பேசிப்பார். மெட்ராஸில் உட்கார்ந்து கொண்டு வேளச்சேரியில் கம்ப்யூட்டரில் ரூமில் உட்கார்ந்து பேசாதே. நீ என்ன யோக்கியனா? உன்னை விளம்பரப்படுத்துவதற்காக 350 கோடி ரூபாயை பீகார் வாத்தியாரிடம் கொடுத்து இருக்கிறாய். உன்னை நல்லவன் என்று சொல்ல வைப்பதற்காக இவ்வளவு ரூபாய் பணத்தை கொட்டி கொடுக்கிறாய். நல்லவன் என்று நான்கு பேர் ஊர்க்காரன் சொல்லவேண்டும். நீ நல்லவனா? கெட்டவனா? என்று சிவகாசிக்காரன் சொல்ல வேண்டும். விருதுநகர் என்று சொல்ல வேண்டும் அல்லது சென்னைக்காரன் சொல்ல வேண்டும்

வடநாட்டுக்காரனை வைத்து 350 கோடி ரூபாய் செலவழித்து நல்லவனாய் காட்டிக் கொள்ள பார்க்கிறாய். எப்படிப்பட்ட கட்சி திமுக. அண்ணா வளர்த்த கட்சி போராடி போராடி வளர்ந்த கட்சி. இன்று கம்ப்யூட்டர் அறையில் உள்ளே கொண்டுபோய் மு.க.ஸ்டாலின் வைத்து விட்டார். நீங்கள் எல்லாம் நினைப்பீர்கள் குறிப்பு இல்லாமல் மு.க.ஸ்டாலின் படிக்கிறார் என்று. அவரால் துண்டு சீட்டு இல்லாமல் ஒருக்காலும் படிக்கவே முடியாது. ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு என்ற கணக்கைக்கூட அவர் எழுதிக் கொடுத்தால் தான் சொல்வார்.

மு.க.ஸ்டாலின் அறைக்குள் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் ஆள் விட்டுப்பார்த்து விட்டோம். அந்த அறை முழுவதும் கம்ப்யூட்டர் தானாம். 25 மைக் இருக்கிறதாம். மேக்கப் போடுவதற்கு 4 லேடிஸ். மேக்கப்பை கலைத்து விட்டு என்னைப்போல ரோட்டில் இன்று காலை பேச சொல்லுங்கள். இல்லை எடப்பாடியாரைப்போல் தமிழ்நாடு முழுதும் சுற்றி வர வேண்டியதுதானே. ஏன் வீட்டை விட்டு வெளியே வர மறுக்கிறாய். உன்னை நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது. வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டே எல்லாரையும் திட்டுகிறாய். அவ்வளவு வக்கிரம் ஸ்டாலின் மனதிற்குள். பதவி போய்விட்டதே வடை போச்சே… வட போச்சே என கதறுகிறார். நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றது வேறு கதை அப்பனே. அது அந்த கதை வேறு. இங்கே எடுபடாது. இங்கே நடக்காது. திமுக கட்சி ஆட்சிக்கு வராது” என அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.