Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆம்னி பஸ் கட்டண கொள்ளை:புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்

ஆம்னி பஸ் கட்டண கொள்ளை:புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்

0

 

 

 

கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு அதாவது மார்ச் மாதத்திற்கு பிறகு கடந்த மாதத்தில் இருந்து தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில், நடப்பாண்டுக்கான தீபாவளி பண்டிகையானது வருகிற 14ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு வருகிற 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சென்னையில் இருந்து 14,757 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதேநேரத்தில் தீபாவளி பண்டிகையின்போது சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு அதிகளவில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த பேருந்துகளில் அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.

இதனை தடுக்க அரசு முயற்சிகள் மேற்கொண்டாலும் கட்டணக் கொள்ளை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில், தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க தமிழக அரசு கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது.
தமிழக அரசின் போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 11.11.2020 முதல் 18.11.2020 வரை இயக்கப்பட உள்ள ஆம்னி பேருந்துகளில் பயணிகள் ஆம்னி பேருந்துகளில் வழக்கத்திற்கு புறம்பாக அதிக கட்டணம் வசூல் செய்வது மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க தமிழக அரசு கட்டணமில்லா தொலைபேசி சேவை (Toll Free – 1800 425 6151) மூலம் புகார் தெரிவிக்கலாம்.

சட்டத்துக்குப் புறம்பாக இயங்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க சரக அளவில் சிறப்பு செயலாக்கப் பிரிவின் (Special Flying Squad) மூலம் தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.