ஐயோ பாவம், கைகழுவ சோப்பு கூட வாங்க முடியத நிலையில் திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகம்.
ஐயோ பாவம், கைகழுவ சோப்பு கூட வாங்க முடியத நிலையில் திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகம்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் தினமும் உலகம் முழுவதும் தினமும் பல்லாயிரம் பேர் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கடுமையான ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது
தற்போது படிப்படியாக சில கட்டுப்பாடுகளுடன் அதாவது பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து தான் வெளியில் வரவேண்டும், ஓர் அலுவலகம் திறப்பின் அந்த அலுவலக வாயிலில் கிருமி நாசினி, கைகழுவ சோப்பு மற்றும் நீர் வைத்திருக்க வேண்டும் போன்ற விதிகளுடன் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு வருகிறது.
திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் அமைந்துள்ள தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் முன்பு கிருமி நாசினி வைக்கப்படவில்லை, ஓர் பழைய மேஜையில் பக்கெட்டில் தண்ணீரும் காய்ந்து போன பழைய சோப்பு மட்டுமே உள்ளது.
இந்த சோப்பை உபயோகித்தால் தான் நோய்த்தொற்று ஏற்படும், பாவம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதிய சோப்பு கூட வாங்கி வைக்க இயலவில்லையே என கூறி கைகளை கழுவாமல் சென்றனார் பொதுமக்கள் .