Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தேவர் ஜெயந்தி விழாவிற்கு முதல்வரும், ஸ்டாலின் ஒன்றாக செல்கின்றனர்.

தேவர் ஜெயந்தி விழாவிற்கு முதல்வரும், ஸ்டாலின் ஒன்றாக செல்கின்றனர்.

0

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடம் அமைந்துள்ளது. இவரது பிறந்தநாள் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30-ந் தேதி தேவர் ஜெயந்தியாக கொண்டாடப்படும்.
அதன்படி நாளை நடக்கும் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு செல்ல விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதே விமானத்தில் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினும் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஒரே விமானத்தில் எடப்பாடி பழனிச்சாமியும், ஸ்டாலினும் ஒரே விமானத்தில் செல்வது இதுவே முதன்முறையாகும்..

Leave A Reply

Your email address will not be published.