கண் திருஷ்டியை போக்க கூடிய உப்பு பரிகாரத்தை ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்.
இந்தப் பரிகாரம் எதிர்மறை ஆற்றலை தூக்கி அப்படியே வெளியே போட்டு விடும்.
கண் திருஷ்டியை போக்குவதற்கு உப்பு ஒரு சிறந்த பொருளாக சொல்லப்பட்டுள்ளது. இந்த உப்பை வைத்து பலவிதமான பரிகாரங்களை பல முறைகளில், பல சொல்லி நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், கண் திருஷ்டியை போக்க கூடிய, எதிர்மறை ஆற்றல்களை விளக்கக்கூடிய இந்த உப்பினை எந்த கிழமையில், எப்படி, நம்முடைய வீட்டில் பயன்படுத்தி வந்தால் இரட்டிப்பு பலனை அடைய முடியும் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
மிக மிக சுலபமான முறையில் நம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலையும் கண்திருஷ்டியையும் தூக்கி வெளியே போட்டு விடலாம்.
ஒரு கண்ணாடி டம்ளர் முழுவதுமாக நல்ல தண்ணீரை நிரப்பிக் கொள்ள வேண்டும். அதில் இரண்டு ஸ்பூன் கல் உப்பைப் போட்டு, நன்றாக கரைத்து விடுங்கள். இதை உங்களுடைய வீட்டில் ஒரு மூலையில் வைத்து விடவேண்டும். இரவு எல்லோரும் தூங்கிய பின்பு இந்த டம்ளரை தயார் செய்து வைக்க வேண்டும். குறிப்பாக யாரும் உறங்காத இடத்தில், வைக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
எதிர்மறை ஆற்றலை அந்த கண்ணாடி டம்ளரில் இருக்கும் உப்புத் தண்ணீர் இருக்கும் போது அந்த இடத்தில் மனிதர்கள் இருக்கும்பட்சத்தில், அந்த எதிர்மறை ஆற்றலின் தாக்கம் கட்டாயம் அந்த நபரை சேரும். ஆகையால் யாரும் இல்லாத இடத்தில் இந்த உப்பு கலந்த தண்ணீரை வைத்து விடுங்கள்.
கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இதை நீங்கள் ஆரம்பிக்கப் போகும் அந்த இரவு ஞாயிற்றுக்கிழமை இரவாக தான் இருக்க வேண்டும். ஞாயிற்றுக் கிழமையில், திருஷ்டியை கழிக்கக் கூடிய பரிகாரத்தை தொடங்கினால் அதன் மூலம் நமக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது.
ஞாயிற்றுக்கிழமையை தொடர்ந்து, திங்கள் செவ்வாய் புதன் வியாழன் மொத்தத்தில் 5 நாட்கள் இரவு இப்படியாக தினமும் செய்து வர வேண்டும்.
மறுநாள் காலை எழுந்த உடனேயே, இரவு கண்ணாடி டம்ளரில் வைத்த உப்பு தண்ணீரை எடுத்த சிங்க் அல்லது மண் பாங்கான இடத்தில் ஊற்றி விட வேண்டும் அந்த பழைய தண்ணீர், முந்தைய நாள் வைத்த தண்ணீர் எக்காரணத்தை கொண்டும் அடுத்த நாள், அதே இடத்தில் இருக்கவே கூடாது. காலை எழுந்தவுடன் உங்களது முதல் வேலை அந்த கண்ணாடி டம்ளரில் இருக்கும் தண்ணீரை வெளியே கொட்டிவிட்டு டம்ளரை நன்றாக கழுவி வைக்க வேண்டியது மட்டும்தான்.
ஐந்து நாட்கள் இரவு இந்த பரிகாரம் செய்து முடித்த பின்பு, வெள்ளிக்கிழமை காலை எழுந்து சுத்தமாக குளித்து முடித்து விட்டு ஒரு டம்ளர் நல்ல தண்ணீரில் மஞ்சளைப் போட்டு நன்றாக கரைத்து விட்டு அந்த தண்ணீரை உங்கள் வீட்டின் உள் பக்கத்தில் இருந்து, வெளி பக்கம் வரை முழுவதுமாக மூலை முடுக்குகளில் படும்வரை தெளித்து வர வேண்டும்.
வெள்ளிக்கிழமை அன்று உங்கள் இஷ்ட தெய்வ கோவிலுக்கு சென்று வரவேண்டும். அவ்வளவுதாங்க!
உங்களை பிடித்த கெட்ட ஆற்றலை நீங்களே உங்களது கையால் மஞ்சள் தண்ணீரை தெளித்து வெளியில் கொண்டு வந்து விட்டு விட்டீர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
நிச்சயம் வீட்டில் இருக்கக்கூடிய தீராத பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்க இந்த ஒரு பரிகாரம் கைகொடுக்கும் .