திமுக பிரமுகர் இல்லம் உட்பட 22 இடங்களில் வருமான வரி சோதனை
திமுக பிரமுகர் இல்லம் உட்பட 22 இடங்களில் வருமான வரி சோதனை
திமுக பிரமுகர் வீடு உள்ளிட்ட 22 இடங்களில் வருமான வரி சோதனை!
தமிழகத்தில் வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக, கோவை திமுக பிரமுகர் வீடு உள்ளிட்ட 22 இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு மற்றும் திருப்பூரில் உள்ள 22 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை திமுக பிரமுகர் பையாக் கவுண்டர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதேபோன்று, ஈரோடு, சென்னை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் 22 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.