ஜி கார்னர் தற்காலிக சந்தையை காலி செய்ய ரயில்வே நிர்வாகம் நோட்டீஸ்
ஜி கார்னர் தற்காலிக சந்தையை காலி செய்ய ரயில்வே நிர்வாகம் நோட்டீஸ்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருச்சி காந்தி சந்தை காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.இதையடுத்து மாற்று ஏற்பாடாக ரயில்வேயிக்கு சொந்தமான ஜி கார்னர் மைதானத்தில் தற்காலிக மொத்த விற்பனை சந்தை கடந்த ஏப்ரல் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன.
–
இந்நிலையில், ஜி கார்னர் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சந்தையை வரும் 31ம் தேதிக்குள் காலி செய்து தரும்படி ரயில்வே நிர்வாகம் மாவட்ட நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் கள்ளிக்குடியில் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மொத்த விற்பனை திறக்கப்பட்டும் வியாபாரிகளின் ஆர்வமின்மையால் பயனற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
–
மேலும், காந்தி சந்தையை திறக்க விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையை நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று மறுத்துள்ளது.தீபாவளி நெருங்கி வரும் நிலையில் நவம்பர் 1ம் தேதி முதல் ஜி கார்னர் தற்காலிக சந்தை செயல்படுமா? என்கிற கேள்விக்குறி எழுந்துள்ளது.
இதனால் வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர். கள்ளிக்குடி மார்க்கெட்டு முழுவீச்சில் செயல்பட மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.