தேவர் குருபூஜைக்காக தடையை மீறி பால்குடம், தடுத்ததால் பெண்கள் சாலை மறியல்
தேவர் குருபூஜைக்காக தடையை மீறி பால்குடம், தடுத்ததால் பெண்கள் சாலை மறியல்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் தேவர் குருபூஜைக்காக
தடையை மீறி பால் குடம் … போலீசார் தடுத்து
நிறுத்தியதால் பெண்கள் சாலை மறியல்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் தேவர் குருபூஜைக்காக தடையை
மீறி பால் குடம் எடுத்துச் சென்ற போது, போலீஸ் தடுத்து
நிறுத்தியதால் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில்
ஈடுபட்டனர்.
பசும்பொன் கிராமத்தில் இன்று முதல் 30-ஆம் தேதி வரை
முத்துராமலிங்க தேவரின் 113 வது ஜெயந்தி விழா மற்றும் 58 வது
குருபூஜை விழா நடைபெறுகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 5 பேருக்கு மிகாமல்,
அனுமதிக்கப்பட்ட வழிதடங்களில் மட்டுமே குரு பூஜைக்கு செல்ல
வேண்டும். ஆனால் குரு பூஜையில் பங்கேற்க கமுதியில் இருந்து
பால் குடங்களுடன் பசும்பொன்னிற்கு ஊர்வலமாக சென்ற
பெண்களை கோட்டைமேடு என்ற இடத்தில் போலீசார் தடுத்து
நிறுத்தியதால் மறியல் நடைபெற்றது.