காரசாரமான சுவையில் நண்டு மசாலா பிரட்டல்.. எப்படி செய்வது?
நண்டு பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது. மிளகுடன் நண்டு சமைத்து உண்டால் சளி முறிவதைப் பார்த்திருப்போம். எனவே அதை வைத்து எப்படி நண்டு பிரட்டல் செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நண்டு – 1 கிலோ
வெங்காயம் – 2
தக்காளி – 3
கிராம்பு – 3ஏலக்காய் 3
புதினா – கையளவு
கொத்தமல்லி – சிறிதளவு
பச்சை மிளகாய் – 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 tbsp
கரம் மசாலா – 1/4 tbsp
மஞ்சள் – 1/4 tbsp
தனியா பொடி – 1/4 tbsp
மிளகாய் தூள் – 1/4 tbsp
உப்பு – தே.அ
தண்ணீர் – 100 ml
சீரகப்பொடி – 1/4 tbsp
மிளகுப்பொடி – 1/2 tbsp
எலுமிச்சை – பாதியளவு
–
செய்முறை :
கடாய் வைத்து எண்ணெய் விட்டு கிராம்பு , ஏலக்காய் சேர்த்து தாளித்துவிட்டு வெங்காயம் , பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.
தக்காளி, புதினா, கொத்தமல்லி , பச்சை மிளகாயை சேர்த்து மிக்ஸியில் அரைத்து அந்த விழுதை சேர்த்து வதக்குங்கள்.
இதன் பச்சை வாடை போய் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பின் சீரகப்பொடி, மிளகுப்பொடி தவிர்த்து கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து தூள் வகைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இறுதியாக உப்பு சேர்த்து பின் நன்கு பிரட்டிக்கொள்ளுங்கள். அடுத்ததாக் சுத்தம் செய்த நண்டை சேர்த்து மசாலா அதில் ஏறுமாறு பிரட்டிவிடுங்கள்.
பின் தண்ணீர் சேர்த்து மீண்டும் பிரட்டிவிட்டு தட்டுபோட்டு சிறு தீயில் 15 நிமிடங்கள் கொதிக்கவிடுங்கள்.
15 நிமிடங்கள் கழித்து சீரகப்பொடி, மிளகுப்பொடி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டிவிட்டு 5 நிமிடங்கள் கொதித்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.
அவ்வளவுதான் நண்டு பிரட்டல் தயார்.