நாளை சுகாதாரம் மற்றும் உயர்நிலை குழு அதிகாரிகளுடன் எடப்பாடி ஆலோசனை
நாளை சுகாதாரம் மற்றும் உயர்நிலை குழு அதிகாரிகளுடன் எடப்பாடி ஆலோசனை
தமிழக முதல்வர் நாளை மருத்துவக்குழுவினரோடும், மாவட்ட ஆட்சியரோடும் ஆலோசனை நடத்துகின்றார்.
கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. பின்னர் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. படிப்படியாக தளர்வுகளை மத்திய – மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. தமிழகத்திலும் கூட மாவட்ட ஆட்சியர், மருத்துவ குழு நிபுணர்கள், அதிகாரிகள் என கலந்தாலோசித்து தளர்வுகளை தமிழக முதல்வர் அறிவித்து வந்தார்.
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வு குறித்து (அக்டோபர் 28ஆம் தேதி) நாளை மாவட்ட ஆட்சியர், மருத்துவ நிபுணர் குழு உடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த முறை எந்தெந்த துறைகளில் தளர்வு அறிவிக்கப்படும் ? என தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மின்சார ரயில்கள் இயக்கம், தியேட்டர்கள் திறக்கவும் அனுமதிக்கப்படும் என தெரிகிறது. மேலும் பள்ளி திறப்பு குறித்து விவாதிக்கப் பட வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே நாடு முழுவதும் நவம்பர் 30ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீடித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.