காந்தி மார்க்கெட் திறக்க தடை நீடிப்பு, உயர் நீதிமன்றம் உத்தரவு
காந்தி மார்க்கெட் திறக்க தடை நீடிப்பு, உயர் நீதிமன்றம் உத்தரவு
காந்தி மார்க்கெட் திறக்க இடைக்கால தடை தொடரும் – மாநகராட்சி கள்ளிக்குடி மார்க்கெட் ஆவணங்களை 1வாரத்தில் சமர்பிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!
திருச்சியில் ஒரு முக்கிய பிரச்சனையாக காந்தி மார்க்கெட் – கள்ளிக்குடி மார்க்கெட் விவகாரம் உருவெடுத்துள்ளது. வியாபாரிகள் ஒருபுறம் காந்தி மார்க்கெட்டில் திறக்க வேண்டும் என்றும் மறுபுறம் சில வியாபாரிகள் கள்ளிக்குடி மார்க்கெட்டுக்கு செல்ல வேண்டும் என இருபுறமாக விவாதம் நடத்தி வருகின்றனர்.
கொரோனா காலகட்டத்தில் திருச்சி காந்தி மார்க்கெட் ஜி கார்னர் பகுதிக்கு மாற்றப்பட்டு, தற்போது உள்ள மார்க்கெட் தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக கு.ப. கிருஷ்ணன் தலைமையில் கள்ளிக்குடி மார்க்கெட்டை திறக்க வேண்டும் என்று மனித வளர் சங்கம் சார்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.அதேபோல காந்தி மார்க்கெட் தொடர்பான உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கள்ளிக்குடி, காந்தி மார்க்கெட் விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் மனித வளர் சங்கம் தொடுக்கப்பட்ட வழக்கில் கள்ளிக்குடி மார்க்கெட்டை திறக்க வேண்டுமென வாதம் முன்வைக்கப்பட்டது. இதற்கு நீதிபதிகள் தலைமையில் அரசாங்கத்தால் கட்டப்பட்ட கள்ளிகுடி மார்க்கெட்டை திறப்பது பற்றியும் ஜி கார்னரில் மூடுவது பற்றி மாவட்ட ஆட்சியர் தான் முடிவு எடுக்க வேண்டும். அரசாங்கத்தால் 77 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மார்க்கெட்டை நிராகரிக்க முடியாது. என்றனர்
மேலும் காந்தி மார்க்கெட் திறக்க வேண்டும் என வழக்கு தொடுத்தவர்கள் நாங்கள் 30, 40 வருடங்களாக இங்கு வியாபாரம் செய்து வருகிறோம். எனவே காந்தி மார்க்கெட்டில் திறக்க வேண்டும் எனவும் கூறினர். இதற்கு நீதிபதிகள் இது ஆங்கிலேயர் காலத்தில் 300 வருடங்களுக்கு மேலாக இருந்து வந்தனர். நீங்களே இதில் வாடகைக்கு தான் இருக்கிறீர்கள். இதில் நீங்கள் சொந்தம் கொண்டாட முடியாது” என்றனர்
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது ஏற்கனவே கள்ளிக்குடி மார்க்கெட்டுக்கு வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கப்பட்டு அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.கள்ளிக்குடி மார்க்கெட்டில் வியாபாரம் செய்வதற்கான வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தரும் என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து வழக்கை செப்டம்பர் 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அக்டோபர் 28 ஆம் தேதியான இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி கிருபாகரன்,புகழேந்தி ஆகியோர் “கடும் போக்குவரத்து நெரிசல் உள்ள இடத்தில் காந்தி மார்க்கெட் திறக்க அவசியம் என்ன? திருச்சி மாநகராட்சி நிர்வாகம் புதிய கள்ளிக்குடி மார்க்கெட் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் காந்தி மார்க்கெட் இயங்குவதற்கு இடைக்கால தடை தொடரும் என வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.