Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருமாவளவனை ஆதரிக்கும் அழகிரி

திருமாவளவனை ஆதரிக்கும் அழகிரி

0

'- Advertisement -

நாங்கள் திருமாவளவனை ஆதரிக்கின்றோம்” பளிச்சென வெடித்த கே.எஸ். அழகிரி !*

Suresh

திருமாவளவன் இந்து மத்ததிற்கு எதிராக பேசவில்லை, மதத்தில் உள்ள தவறுகளை மட்டுமே சுட்டிக்காட்டினார். அதனால், நாங்கள் திருமாவளவனை ஆதரிக்கின்றோம் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி கருத்து தெரித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரத்தில்,  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் நினைவிடத்தில் இன்று கே.எஸ். அழகிரி  மலர் தூவிஅஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவ துறையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. அந்த மசோதாவில் ஆளுநர் உடனே கையெழுத்துயிட வேண்டும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மீது காவல்துறையினர் வழக்கு போட எந்த வித முகாந்திரமும் இல்லை. ஆனால், சிலரது அழுத்தம் காரணமாக வழக்கு போட்டுள்ளனர். புராணங்களில் உள்ளதை தான் திருமாவளவன்  எடுத்துக் கூறியுள்ளார். ஆனால், அதை அப்படியே திருப்பி பாஜகவினர் அரசியல் செய்கின்றனர்.
இந்து மதத்திற்கு எதிராக திருமாவளவன் பேசவில்லை, அப்படி அவர் பேசிதாகவும் தெரியவில்லை. எனவே, நாங்கள் அவரை ஆதரிக்கின்றோம். விரைவில் கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி உறுதியாக போட்டியிடும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.