ரஜினியுடன் ஏசி சண்முகம் சந்திப்பு அரசியலா ? புஸ்வானமா?
ரஜினியுடன் ஏசி சண்முகம் சந்திப்பு அரசியலா ? புஸ்வானமா?
ரஜினியுடன் ஏ.சி.சண்முகம் திடீர் சந்திப்பு… அரசியலா அல்லது புஸ்வானமா?*
தமிழகத்தில் அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்குகின்றன. ஆனால் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா?, தேர்தலில் போட்டியிடுவாரா? போட்டியிட மாட்டாரா? என்ற பரபரப்பில் இருக்கிறார் நடிகர் ரஜினி.
ஆனால் அவரது ஆதரவாளர்கள் என கூறிக்கொள்ளும் சிலர் ரஜினி இப்போது கட்சி தொடங்குவார், அந்த மாதத்தில் கட்சி தொடங்குவார் என கூவி வருகின்றனர். இதனால் அவரது ரசிகர்கள் குழப்பதில் உள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் சந்தித்து பேசினார். சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
ரஜினிகாந்த் – ஏ.சி சண்முகம் ஆகிய இருவரும் சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து ஆலோசனை நடத்தினர். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ரஜினியும், ஏ.சி.சண்முகமும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
விஜயதசமி நாளன்று கட்சி தொடர்பாக ரஜினிகாந்த் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என தகவல் வெளியான நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. எனினும் சந்திப்பின் போது எவை குறித்து பேசப்பட்டது என்ற அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
கடந்த 2019 வேலூர் நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக சார்பாக இரட்டை இலை சின்னத்தில் ஏ.சி.சண்முகம் போட்டியிட்டு திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.