Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நெல் கொள்முதலில் வரலாற்று சாதனை. அமைச்சர் காமராஜ் பெருமிதம்

நெல் கொள்முதலில் வரலாற்று சாதனை. அமைச்சர் காமராஜ் பெருமிதம்

0

*22 நாட்களில் 72 லட்சம் மூட்டைகள் நெல் கொள்முதல்!  வரலாற்று சாதனையால் அமைச்சர் காமராஜ் பெருமிதம் !*

இதுவரை இல்லாத அளவாக கடந்த பருவத்தில் 2,85,000 மூட்டைகள் நெல்கொள்முதல் செய்தது போன்று

இந்த பருவம் தொடங்கிய 22 நாட்களில் 72 லட்சம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது வரலாற்று சிறப்பு நிகழ்வாகும் என உணவு அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம் மூலங்குடி மற்றும் நன்னிலம் வட்டம் குவளைக்கால் ஆகிய பகுதிகளிலுள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் ஆய்வு செய்தார்.

மாவட்ட கணிப்பாய்வு அலுவலரும் அரசு முதன்மை செயலர் பொதுப்பணித்துறை முனைவர். கே.மணிவாசன் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த் உடனிருந்தார்.

பின்னர்  உணவுத்துறை அமைச்சர் காமராஜ்  செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், டெல்டா பகுதியில் விளைவிக்கப்பட்ட குறுவை நெல்லினை விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவினை முதல்வர் பிறப்பித்துள்ளார்.

டெல்டா மாவட்டத்தை பொறுத்தவரையில் விவசாயம் தான் முதன்மை தொழிலாக உள்ளது. குறுவை சாகுபடி எட்டு வருடங்களுக்கு பின்னர் மிகச்சிறப்பாக விளைச்சல் கண்டுள்ளது. டெல்டா வரலாற்றிலேயே சென்ற ஆண்டு காரிப் பருவத்தில் 32,41,000 நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் டெல்டா பகுதியிலுள்ள 6,00,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். கொள்முதல் செய்யப்பட்டு அதற்குரிய தொகையும் 24 மணி நேரத்திற்குள்ளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. விவசாயிகளின் வங்கிகணக்கில் செலுத்தப்பட்ட மொத்த தொகை 6130 கோடி ஆகும்.

அதுபோன்று, இதுவரை இல்லாத அளவாக கடந்த காரீப் பருவத்தில் 2,85,000 மூட்டைகள் நெல்கொள்முதல் செய்தது போன்று இந்த பருவம் தொடங்கிய 22 நாட்களில் 72 லட்சம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது வரலாற்று சிறப்பு நிகழ்வாகும்.
அது போன்று திருவாரூர் மாவட்டத்தில் 249 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 93,727  மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் 17,428 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அவர்களுக்கு உரிய தொகை 171.60 கோடி பணம் விவசாயின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட 93 சதவீதம் அறுவடை முடிந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.