நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண உதவி வழங்க செந்தில் ராஜலட்சுமி முதல்வரிடம் மனு
நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண உதவி வழங்க செந்தில் ராஜலட்சுமி முதல்வரிடம் மனு
நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண உதவி வழங்கிட செந்தில் கணேஷ் ராஜலட்சுமி முதல்வரிடம் மனு!
நாட்டுப்புற கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்க நாட்டுப்புற கலைஞர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் முதல்வரிடம் மனு அளித்தனர்.
கொரோனா ஊரடங்கால் கடந்த 8 மாத காலமாக கலை நிகழ்ச்சிகள் செய்ய முடியாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து கலைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட கலைஞர்களுக்கு தலா 10,000 நிவாரண உதவி வழங்கிட வேண்டும்.
திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள்,கோயில் திருவிழாக்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு சமூக இடைவெளியுடன் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும் என்று புதுக்கோட்டை வந்த முதல்வரிடம் தமிழ்நாடு நாட்டுப்புற மேடை கலைநிகழ்ச்சி கலைஞர்கள் சங்கம் சார்பாக நாட்டுப்புற கலைஞர்கள் செந்தில்கணேஷ், ராஜலட்சுமி மனு கொடுத்தனர்.