விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும் – எஸ்.ஏ சந்திரசேகர்*
விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும் - எஸ்.ஏ சந்திரசேகர்*
*விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும் – எஸ்.ஏ சந்திரசேகர்*
சென்னை: பாஜகவில் இணையப்போகிறோம் என்ற கருத்துக்கே இடமில்லை என்று எஸ்.ஏ சந்திரசேகர் கூறியுள்ளார். எனக்கென்று ஒரு அமைப்பு இருக்கிறது அதை வலுப்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருக்கிறேன். விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும் போது அரசியல் கட்சியாக மாறும் என்றும் என்று கூறியுள்ளார் எஸ்.ஏ. சந்திரசேகர். நடிகர்களின் சுதந்திரத்தை யாராலும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு பிரபலங்கள் கட்சியில் சேர்ந்து வருகிறார்கள். சில பிரபலங்கள் கட்சி மாறி வருகிறார்கள். பாஜகவில் நடிகர்கள் பலரும் இணைந்து வரும் நிலையில் நடிகர் விஜய்யின் தந்தை பாஜகவில் இணையப்போவதாக தகவல் வெளியாது.
சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாஜகவில் சேரப்போவதாக வெளியான தகவலை திட்டவட்டமாக மறுத்தார் எஸ் ஏ சந்திரசேகர். இந்த தகவலும் வதந்திகளும் திட்டமிட்டு ஏன் பரப்பப்படுகிறது என்று தெரியவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த எஸ்.ஏ சந்திரசேகர், எனக்கென்று ஒரு அமைப்பு இருக்கிறது. அதை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறினார். விஜய் மக்கள் இயக்கம் தேவைப்பட்டால் அரசியல் கட்சியாக வலுப்பெறும் என்றும் தெரிவித்தார்.
பாஜகவில் இணையப்போகிறோம் என்ற கருத்துக்கே இடம் இல்லை என்றும் கூறிய எஸ்.ஏ சந்திரசேகர், நடிகர்களின் சுதந்திரத்தை யாராலும் தடுக்க முடியாது என்று தெரிவித்தார்