தீரன்மா நகரில் வாரச் சந்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களை விரட்டியடித்த பொதுமக்கள்.
தீரன்மா நகரில் வாரச் சந்தைக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களை விரட்டியடித்த பொதுமக்கள்.
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் தீரன்மா நகரில் கடந்த 4 வருடங்களுக்கு மேலாக வியாழன்தோறும் வார சந்தை நடைபெற்று வருவது வழக்கம்.
கொரானா ஊரடங்கு காலத்தில் செயல்படாமல் இருந்து வந்த இந்தச் சந்தை தற்போது கடந்த நான்கைந்து வாரங்களாக காலையில் நடைபெற்று வந்துள்ளது.
தற்போது வியாழக்கிழமைகளில் மாலை மார்க்கெட் நடைபெற உள்ளது என கடந்த இரண்டு நாட்களாக இப்பகுதி முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்டு இன்று இந்த வார மார்க்கெட் மாலை 4 மணி முதல் செயல்பட ஆரம்பித்தது.
இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த ஓரிருவர் இந்த வார சந்தை செயல்பட எதிர்ப்பு தெரிவித்தனர்.
கள்ளிக்குடி மார்க்கெட் ஆரம்பிக்க உள்ள நிலையில் இந்த வார சந்தை செயல்பட்டால் அங்கு கடைகள் எடுத்து இருக்கும் வியாபாரிகளுக்கு இந்த வாரச் சந்தை இடைஞ்சலாக இருக்கும் என கூறி தகராறில் ஈடுபட்டனர்.
ஆனால் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் ஒன்று சேர்ந்து இங்கு பார்வையற்றோர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களால் கொண்ட கிலோ மீட்டர் தூரம் சென்று காய்கறிகள் மற்றும் பொருட்கள் வாங்க இயலாது.
நாங்கள் குடியிருக்கும் பகுதியின் அருகில் உள்ள இந்த வாரச் சந்தையில் ஊனமுற்றோர், வயதானவர், போன்ற அனைவருக்கும் பயன்பெறும் வகையில் உள்ளது. எனவே மாவட்ட ஆட்சித்தலைவர் உடனடியாக நடவடிக்கையில் இறங்கி இந்த மார்க்கெட் நிரந்திரமாக இங்கேயே செயல்பட உத்தரவிட வேண்டும் என கூறி எதிர்ப்பு தெரிவித்த அனைவரையும் விரட்டியடித்தனர்.
அதனை தொடர்ந்து அப்பகுதியில் வாரச்சந்தை எப்போதும் போல் செயல்பட்டது.