Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி BHEL ஊழியர்கள் உண்ணாவிரதம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி BHEL ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி BHEL ஊழியர்கள் உண்ணாவிரதம்

0

இன்று திருச்சி பெல் நிறுவனத்தின் மெயின் கேட்டில் அனைத்து தொழிற்சங்கம் சார்பாக மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

முக்கிய கோரிக்கையாக உணவகத்தில் உணவின் விலை உயர்வை கண்டித்தும்,
இரவு நேர படி அல்லாத பணி நேரத்தை மாற்றி உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற BHEL திருச்சி நிர்வாகத்தின் செயல்பாட்டைக் கண்டித்தும்,

CORONA காலத்தை பயன்படுத்தி PERKS & DA உள்ளிட்ட பணபலன்களை பறித்து BHEL தொழிலாளர்களுக்கு மாதம் ரூ10000/- வரை ஊதிய இழப்பு ஏற்படுத்தி வரும் BHEL CORPORATE நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தோழர் பிரபு, பொதுச்செயலாளர் அவர்களின் தலைமையிலும், மாவட்டச் செயலாளர் தோழர் சிவராஜ் அவர்கள் முன்னிலையிலும் துணைத் தலைவர்கள் அருணன், பரமசிவம், பெரியசாமி, ராஜேஷ்கண்ணா உள்ளிட்ட சங்க முன்னணி தோழர்கள் பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.