Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி வந்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை புறக்கணித்த எடப்பாடி செல்லப்பிள்ளை திருச்சி ஆவின் சேர்மன் கார்த்திகேயன்.

திருச்சி வந்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை புறக்கணித்த எடப்பாடி செல்லப்பிள்ளை திருச்சி ஆவின் சேர்மன் கார்த்திகேயன்.

0

புரட்டாசி 3 – ஆம் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் பால்வளத்துறை அமைச்சர் இராஜேந்திர பாலாஜி இன்று மாலை சுவாமி தரிசனம் செய்ய உள்ளார் என திருச்சி ஆவின் சேர்மன் கார்த்திகேயனுக்கு முன்னதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

மாலை 6 மணியளவில் ஸ்ரீரங்கம் கோயில் வந்த பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காலில் காயத்திற்கான கட்டு போட்டு இருப்பதால் நார்மலாக நடக்க முடியவில்லை இதனால் நேரடியாக மூல சன்னதிக்குச் சென்று பெருமாளை சந்தித்து விட்டு கோயிலில் இருந்து வெளியேறினார்.

முறைப்படி ஒரு மாவட்டத்திற்கு அமைச்சர் ஒருவர் துறை ரீதியாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகிறார் என்றாலோ, பர்சனல் வேளையாக வந்தாலோ அத்துறையை சேர்ந்த மாவட்ட தலைவர் அவரை வரவேற்க்க வேண்டும் என்பது மரபு.

வரும் 7-ம் தேதி அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிக்கப்பட உள்ளது.

ஒருங்கிணைப்பாளர் OPS , துணை ஒருங்கிணைப்பாளர் EPS , இணை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மூத்த அமைச்சர்கள் இதனைக் குறித்து முடிவெடுக்க உள்ளார்கள்.

இந்நிலையில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக சில அமைச்சர்களும், இபிஎஸ் க்கு ஈ பி எஸ் க்ருஆதரவாக பல அமைச்சர்களும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றனர்.

இபிஎஸ் அணி யார் ஒபிஎஸ் அணி யார் என அதிமுக தொண்டர்களுக்கே தெளிவாக யாருக்கும் தெரியவில்லை..

ஆனால் தற்போது திருச்சி ஆவின் சேர்மன் கார்த்திகேயன் (எடப்பாடி பழனிச்சாமியின் செல்லப்பிள்ளை என்பது அனைவரும் அறிந்ததே.)

இவர் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை வரவேற்காமல் புறக்கணித்து இருப்பதால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒ.பி.எஸின் ஆதரவாளர் என்பது தெள்ளத் தெளிவாக தெரியவருகிறது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வருகை குறித்தும் சேர்மன் கார்த்திகேயன் வராதது குறித்தும் பால்வளத்துறை அமைச்சரின் செய்தி தொடர்பாளர் ரவி அவர்களிடம் நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது நான் அமைச்சருடன் பேசிக்கொண்டே இருக்கிறேன் பிறகு உங்களை தொடர்பு கொள்கிறேன் எனக் கூறியவர் அதன் பிறகு தொடர்பு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி பழனிச்சாமியின் செல்லப்பிள்ளையான திருச்சி ஆவின் சேர்மன் கார்த்திகேயன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை புறக்கணித்து இருப்பதினால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒபிஎஸின் அதரவாளர் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது திருச்சி அதிமுக தொண்டர்கள் கூறி சென்றனர்.

ஆவின் சேர்மன் கார்த்திகேயனை நாம் நேரில் சென்று பார்க்க வேண்டும் என்றால்

(பத்திரிக்கை விளம்பரம் மற்றும் செய்தி சம்மந்தமாக இருந்தாலும்) ஆவின் துறையில் பணிபுரியும் அதிகாரிகள் முதற்கொண்டு கார்த்திகேயனை சந்திக்க முடியாது, அவரது தம்பி அரவிந்த்தை பார்த்துக் கொள்ளுங்கள் எனக்கூறி சேர்மனை நேரில் சந்திக்க விடமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.