Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கூரியரில் வெடி பொருட்கள் அனுப்பிய இருவர் கைது.

கூரியரில் வெடி பொருட்கள் அனுப்பிய இருவர் கைது.

0

கடந்த 18 ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த ஸ்டூடியோ உரிமையாளர் வீரகுமாருக்கு சி.கார்த்திரப்பன், எண்.10 சி, வெள்ளாளர் தெரு, தென்னூர் ஹை ரோடு, திருச்சி 17 என்ற முகவரியில் இருந்து புரோபஷனல் கூரியர் மூலம் பார்சலில் வெள்ளை நிற ஒயர், பியூஸ், Rex- 90 என்ற வெடிபொருள் வந்ததாக புகார் அளித்தார்.

திருச்சியை
சேர்ந்த ஒரு நிதி நிறுவனம் தான் இந்த வெடி பொருட்களை அனுப்பியதாக காவல்துறையில் புகார் அளித்தார்.

இப்புகாரின் பேரில் திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துரை IPS நீடாமங்கலம் காவல்நிலைய குற்ற எண் 1292/20 u /s of Explosive substances Act 1908 r/w 507 IPC ன் படி வழக்கு பதிவு செய்து 2 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டார் .

தனிப்படையினர் மேற்படி பார்சல் அனுப்ப பட்ட கொரியர் சர்வீஸ் ஆபீஸ், பார்சல் அனுப்பப்பட்ட முகவரி ஆகிய இடங்களுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் தஞ்சையை சேர்ந்த அமித் உசேன் என்பவரின் மகன் அமீர் சையது (வயது 40) மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகாவை சேர்ந்த கருப்பையா மகன் சத்தியமூர்த்தி (வயது 35) இருவரையும் போலீசார் கைது செய்து நீதி மன்ற பருத்தி காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்த வெடி பொருள்கள் பார்சலை அனுப்ப உதவிய மற்ற நபர்கள் யார் யார் என போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் அவர்களும் விரைவில் சிக்குவார்கள் என தெரிகிறது . குற்றவாளிகளை விரைந்து கைது செய்த தனி படையினரை திருவாருர் காவல்துறை கண்கானிப்பாளர் துரை வெகுவாக பாராட்டினார்.

இதில் கைதான புதுக்கோட்டை சத்திய மூர்த்தி என்பவன் திருச்சி எல்பின் நிறுவனம் போலியானது இதில் யாரும் பணம் கட்டி ஏமாற வேண்டாம் என தினமும் விதவிதமாக வீடியோ வெளியீட்டு இரண்டு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டி வந்தவன்.
இவனுடன் ஒர் கட்சி தொலைகாட்சி நிருபரும் இணைந்து மிரட்டி வந்துள்ளான் என்பது கூறிப்பிடதக்கது.

Leave A Reply

Your email address will not be published.