திருச்சியில் தமிழ்நாடு அனைத்து மின்வாரிய தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.
திருச்சியில் தமிழ்நாடு அனைத்து மின்வாரிய தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
.
முத்தரப்பு ஒப்பந்தத்திற்கு எதிராக தன்னிச்சையாக உத்தரவுகளை பிறப்பிக்க கூடாது,. கொரோனாவால் இறந்த மின்வாரிய தொழிலாளிக்கும் இதர துறைகளுக்கு வழங்கியது போல் ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். துணை மின் நிலையங்களை குத்தகை மற்றும் அவுட்சோர்சிங் என்ற நவீன பெயரால் தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தொழிற்சங்க விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் புதனன்று மன்னார்புரத்திலுள்ள உள்ள திருச்சி பெருநகர் வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தொமுச மாநில தொழிலாளர் அணி செயலாளர் மலையாண்டி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணை தலைவர் ரெங்கராஜன், ஐக்கிய சங்க செயலாளர் ராஜமாணிக்கம், பொறியாளர் கழக செயலாளர் சந்தானகிருஷ்ணன், இன்ஜினியர் சங்க செயலாளர் பாலாஜி, எம்பிளாய் பெடரேஷன் செயலாளர் செல்வம், தொழிலாளர் சம்மேளன செயலாளர் பெருமாள், ஐஎன்டியூசி செயலாளர் சேகர், என்.எல்.ஒ செயலாளர் பாலகிருஷ்ணன், டி என் பி இ ஒ செயலாளர் இருதயராஜ் மற்றும் பன்னீர்செல்வம் செல்வராஜ், தியாகராஜன், உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.