திருச்சி பீமநகரில்
காந்தி ஜெயந்தி முன்னிட்டு
சிறப்பு இலவச மருத்துவ முகாம்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டுதிருச்சி பீமநகர் ஹீபர் ரோடு ஆர்.பி. கிளினிக்கில் இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது. காலை 9 மணிக்கு தொடங்கிய மருத்துவ முகாம் மதியம் ஒரு மணி வரை நடந்தது.
இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவர் நூதன் சபரீஷ், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் காயத்ரி தேவி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச ஆலோசனைகளை வழங்கினர். இந்த முகாமில் குழந்தைகள் வளர்ப்பு குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. சிறப்பு சலுகை விலையில் அனைத்து ரத்த பரிசோதனைகளும் செய்யப்பட்டது. ரத்த அழுத்தம்,உடல் நிறை குறியீட்டு எண், ரத்த சோகை கண்டறியப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
காய்ச்சல் கால சிறப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டது. அனைவருக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. இந்த முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.