

திருச்சியில்
எல்.ஐ.சி முகவர்கள் தர்ணா போராட்டம்.
பாலீசிக்கான போனசை உயர்த்தி வழங்க வேண்டும். பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். பணிக்கொடையை 20லட்சமாக உயர்த்த வேண்டும். மருத்துவ காப்பீடு அனைத்து முகவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். முகவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
அகில இந்திய அளவில் எல்.ஐ.சி முகவர் சங்கங்களின் கூட்டுக் குழு சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.
திருச்சி அலுவலகத்தில் 6 கிளைகளை சேர்ந்த நிர்வாகிகள், தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்திற்கு திருச்சி மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் கோகுலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

