Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

0

'- Advertisement -

திருச்சியில் இன்று விநாயகர் சதுர்த்தி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

திருச்சியில் காலை உச்சிப்பிள்ளையார் கோயிலில் 150 கிலோ எடையுள்ள மெகா சைஸ் கொழுக்கட்டை படையில் யிடப்பட்டது.

மேலும் திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் கோயில்களிலும்,
அமைப்புகள் சார்பிலும் பெரிய மற்றும் புதுமையான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது.

குறிப்பாக திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் அருகே இந்து இளைஞர் அணி சார்பில் கண்ணன் ஏற்பாட்டில் 39வது ஆண்டாக 18 அடி உயர பெரிய பிள்ளையார் சிலை அமைக்கப்பட்டு இருந்தது.

அதேபோல் பீமநகர் கிருஷ்ணர் கோயில் எதிரில் 24 வது ஆண்டாக இந்து முன்னணி மற்றும் பாரத மாதா இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் 16 அடி உயர சிங்க கணபதி கௌதம் நாகராஜன் தலைமையில் அமைக்கப்பட்டு இருந்தது.மேலும் சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டியும் நடைபெற்றது.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் இந்து முன்னணி சார்பில் 24-ம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இல.கண்ணன் சார்பில் 12 அடி உயர மங்கள விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றது.

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் அகில இந்திய இந்து மகா சபா சார்பில் மாவட்டத் தலைவர் மணிகண்டன் தலைமையில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

திருச்சியில் 1000க்கும் மேற்பட்ட இடங்களில் சிறு மற்றும் பெரிய விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றது.

மூன்றாவது நாளான செப்டம்பர் இரண்டாம் தேதி அன்று சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று காவேரி ஆற்றில் கரைக்கப்படும்.

அனைத்து சிலைகளுக்கும் போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.