Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஜேகேசி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஜான் ராஜ்குமார் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

0

'- Advertisement -

திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஜான் ராஜ்குமார் 59 வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

திருச்சி ஜே.கே சி அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஜான் ராஜ்குமார் 59வது பிறந்தநாள் மற்றும் அன்னை தெரசா பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி பீமநகரில் நடைபெற்றது.

இந்த விழாவில் 5 மாணவர்களுக்கு கல்வி உதவிகள் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் ஜேகேசி அறக்கட்டளை நிறுவனர், முனைவர் பா.ஜான் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.

பேராசிரியர் அருள் வரவேற்புரை ஆற்றினார். வழக்கறிஞர் சி.பி.ரமேஷ், பேராசிரியர் ரவி சேகர், இன்ஜினியர் சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் கே. சுப்பையா பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த விழாவில் வசந்தம் அரிமா சங்க தலைவர் டாக்டர் டி.ஜி.ஆர் வசந்தகுமார், ரவி ஆசிரியர் எம். அலெக்சாண்டர், ஓய்வு பெற்ற தாசில்தார் கே.எஸ். அப்துல் அஜீஸ், முன்னாள் தலைமை ஆசிரியர் சார்லஸ், ஆடிட்டர் ரிச்சர்ட் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

முடிவில் சகுந்தலா சந்தானகிருஷ்ணன் நன்றி கூறினார்.

இந்த விழாவில் மனோகரி ராஜ்குமார், ஜே.ஜாய் எஸ்தர், வெங்கடேஸ்வரராவ், அம்பேத்கர் சாக்ரடீஸ், ஜமால் முகமது கல்லூரி தமிழ் துறை தலைவர் டாக்டர் ஏ சையத் ஜாகிர் ஹசன், மூத்த வழக்கறிஞர் கா. செல்வராசு, டாக்டர் குமார் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.